“புதுச்சேரியில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம்!” – துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரியில் வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த மாதம் தொடங்கிவைத்தார். அதையடுத்து, சுகாதாரப் பணியாளர்கள் வீடுதோறும் சென்று தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டுவருகின்றனர். பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பதுடன், அதற்கு எதிர்ப்பும் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், வில்லியனூரை அடுத்த ஒதியம்பட்டு பகுதியில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாடோடிப் பழங்குடியின இன மக்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் மூலம் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் கலந்துகொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அந்த மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

தடுப்பூசி

அதையடுத்து மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளைப் பார்வையிட்டார். தொடர்ந்து அந்தப் பகுதி மக்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அங்கிருந்த குழந்தைகளுக்குப் பாட புத்தகங்கள், நோட்டுகள், எழுது பொருள்களை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஒதியம்பட்டு பகுதியில் பழங்குடியினர் சமுதாயப் பெண்கள் கழிப்பறை வசதி வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். நிரந்தரமான கழிப்பறைகள் கட்டுவதற்கு முன்பாக, ஒரு நடமாடும் கழிப்பறையை உடனடியாக நிறுத்தும்படி சுகாதாரத்துறை மற்றும் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளிடம் கூறியிருக்கிறேன்.

மேலும், நிரந்தரமாகக் கழிப்பறைகள் கட்ட ஏற்பாடு செய்திருக்கிறேன். அதற்கு பிறகு வீடுகள் கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும். முதல்வருடன் ஆலோசனை நடத்தி அதற்கான முடிவு எடுக்கப்படும். புதுச்சேரியில் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறோம். இது பொதுமக்களின் நலனுக்காக மட்டுமே. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது” என்றார். அப்போது அவரிடம், “மத்திய அரசு புதுச்சேரியைப் புறக்கணிக்கிறது என்றும், இது தொடர்பாக பொது இடத்தில் விவாதிக்க தயாரா என்றும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியிருக்கிறாரே’’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தமிழிசை செளந்தரராஜன்

Also Read: விநாயகர் சிலைக்கு அனுமதி ஏன்? – புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறும் காரணம்!

அதற்கு, “இது விவாதிக்கும் நேரம் இல்லை. மத்திய அரசு புதுச்சேரிமீது தனி கவனம் செலுத்திவருகிறது. புதுச்சேரியில் நிர்வாகரீதியாக அனைத்தும் சரியாக நடந்துவருகின்றன” என்று பதிலளித்தார்.

AIARA

🔊 Listen to this புதுச்சேரியில் வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த மாதம் தொடங்கிவைத்தார். அதையடுத்து, சுகாதாரப் பணியாளர்கள் வீடுதோறும் சென்று தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டுவருகின்றனர். பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பதுடன், அதற்கு எதிர்ப்பும் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், வில்லியனூரை அடுத்த ஒதியம்பட்டு பகுதியில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாடோடிப் பழங்குடியின இன மக்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் மூலம் நிவாரணப் பொருள்கள் வழங்கும்…