புதுக்கோட்டை: அரசுப் பேருந்து மீது மோதிய பைக்; பற்றி எரிந்த பேருந்து – 2 பேர் பலி!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையிலிருந்து 50 பயணிகளுடன், புதுக்கோட்டை வழியாகத் திருச்சி நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது பேருந்து, திருமயம், பாம்பாற்று பாலம் அருகே வந்த போது, எதிரே அதிவேகமாக வந்த டூவிலர் ஒன்று அரசு பேருந்து மீது மோதியது.

மோதிய வேகத்தில் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் திடீரென வெடித்து, தீப்பற்றி எரிந்தது. பைக்கிலிருந்து, அரசு பேருந்திலும் தீ பற்றியதால் பேருந்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அதையடுத்து, பேருந்திலிருந்த பயணிகள், ஓட்டுநர், நடத்துநர் என அனைவரும் அலறியடித்துக் கொண்டு இறங்கி ஓடினர். இந்த விபத்தில் டூவீலரில் வந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

தீப்பற்றி எரியும் பேருந்து

பேருந்து முழுவதும் தீ பரவி எரியத் தொடங்கியது. அதையடுத்து, சம்பவம் தொடர்பாக உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. திருமயம் தீயணைப்புத் துறையினர் தீப்பற்றி எரிந்த அரசு பேருந்தைத் தண்ணீரைப் பீச்சி அடித்து அணைத்தனர்.அதேபோல, டூவீலரில் எரிந்த தீயும் அணைக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த திருமயம் போலீஸார் இறந்த இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த சுமார் 50 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அரசுப் பேருந்து தீப்பற்றி எரிந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read: புதுக்கோட்டை: கூட்டுறவு வங்கியில் 1.8 கோடி மோசடி… செயலாளர், மேற்பார்வையாளர் சஸ்பெண்ட்!

🔊 Listen to this சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையிலிருந்து 50 பயணிகளுடன், புதுக்கோட்டை வழியாகத் திருச்சி நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது பேருந்து, திருமயம், பாம்பாற்று பாலம் அருகே வந்த போது, எதிரே அதிவேகமாக வந்த டூவிலர் ஒன்று அரசு பேருந்து மீது மோதியது. மோதிய வேகத்தில் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் திடீரென வெடித்து, தீப்பற்றி எரிந்தது. பைக்கிலிருந்து, அரசு பேருந்திலும் தீ பற்றியதால் பேருந்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அதையடுத்து, பேருந்திலிருந்த…