பிரிந்து வாழ்ந்த மனைவியை சந்தித்த வாலிபருக்கு கத்தி குத்து: கணவர் கைது

ஆவடி: பாரிமுனை, லிங்கி செட்டித்தெருவில் வசிப்பவர் அப்பு என்ற டெல்லிபாபு (28) கூலி தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (24). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சங்கீதா, கணவர் டெல்லிபாபுவை விட்டு பிரிந்து இரு குழந்தையுடன் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், பிருந்தாவன் அவின்யூவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சங்கீதாவை மண்ணடி, அங்கப்பன் நாயக்கன் தெருவைச் சேர்ந்த உறவினர் சதீஷ் (20) என்பவர் அடிக்கடி வந்து சந்தித்து வந்துள்ளார். இந்த விஷயம் டெல்லிபாபுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கடந்த 21ம் தேதி இரவு டெல்லிபாபு, சங்கீதா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அங்கு சதீஷ் இருந்துள்ளார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த டெல்லிபாபு கத்தியை எடுத்து சதீஷை சரமாரியாக குத்தி உள்ளார். இதில், அவருக்கு தலை, இரு கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் டில்லிபாபு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்த சதீஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான டெல்லி பாபுவை நேற்று முன்தினம் மாலை கைது செய்தனர். பின்னர், போலீசார் அவரை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

🔊 Listen to this ஆவடி: பாரிமுனை, லிங்கி செட்டித்தெருவில் வசிப்பவர் அப்பு என்ற டெல்லிபாபு (28) கூலி தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (24). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சங்கீதா, கணவர் டெல்லிபாபுவை விட்டு பிரிந்து இரு குழந்தையுடன் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், பிருந்தாவன் அவின்யூவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சங்கீதாவை மண்ணடி, அங்கப்பன் நாயக்கன் தெருவைச் சேர்ந்த உறவினர் சதீஷ்…