பிரிட்டனில் ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா

பிரிட்டனில் முதல் முறையாக ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஒமைக்ரான் பரவல் காரணமாக கொரோனா பரிசோதனை பிரிட்டனில் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாக ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 122 ஆக பதிவாகியுள்ளது. இதனால், பலர் விடுமுறை எடுத்து சிகிச்சை பெற்றுவருவதால், பல தொழிற்சாலைகள், அலுவலகங்களில் ஊழியர்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது.

இதன் காரணமாக தனிமைப்படுத்தும் காலத்தை 10 நாளில் இருந்து 7 நாளாக பிரிட்டன் அரசு குறைத்துள்ளது. அதே நேரம் கிறிஸ்துமஸ் வரை புதிய கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதில்லை என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

image

ஒமைக்ரான் பரவலின் வேகம் மற்றும் அதனால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேருவோரின் எண்ணிக்கை உயரும் போன்ற தகவல்கள் உறுதி செய்யப்படாததால் கட்டுப்பாடுகள் தற்போதைக்கு இல்லை என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. எனினும் நிலைமை மோசமடைந்தால், கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பின் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

🔊 Listen to this பிரிட்டனில் முதல் முறையாக ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாக கொரோனா பரிசோதனை பிரிட்டனில் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாக ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 122 ஆக பதிவாகியுள்ளது. இதனால், பலர் விடுமுறை எடுத்து சிகிச்சை பெற்றுவருவதால், பல தொழிற்சாலைகள், அலுவலகங்களில் ஊழியர்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இதன் காரணமாக தனிமைப்படுத்தும் காலத்தை…