பால்கேனில் மறைத்து வைத்து கள்ளச் சாராயம் விற்றவர் கைது

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பால்கேனில் மறைத்து வைத்து கள்ளச் சாராயம் விற்றவரை போலீஸார் கைது செய்தனர்.

அரூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விக்னேஸ்வரமூர்த்தி தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் மாலை அரூர் அடுத்த கொங்கவேம்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எஸ்.பட்டி பகுதியில் ஒருவர் வீட்டருகே கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரித்தபோது, அவர் சாத்தகி (42) என்பதும் பால்கேனில் மறைத்து வைத்து கள்ளச் சாராயத்தை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், அவர் சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியில் இருந்து கள்ளச் சாராயத்தை வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அவரிடமிருந்து 35 லிட்டர் கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்த போலீஸார் அதை தரையில் கொட்டி அழித்ததுடன், சாத்தகியை கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.

AIARA

🔊 Listen to this தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பால்கேனில் மறைத்து வைத்து கள்ளச் சாராயம் விற்றவரை போலீஸார் கைது செய்தனர். அரூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விக்னேஸ்வரமூர்த்தி தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் மாலை அரூர் அடுத்த கொங்கவேம்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எஸ்.பட்டி பகுதியில் ஒருவர் வீட்டருகே கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரித்தபோது, அவர் சாத்தகி (42) என்பதும் பால்கேனில் மறைத்து…

Leave a Reply

Your email address will not be published.