பாலிவுட் பிரபலங்கள் கைது, தொடர் சர்ச்சை; ஷாருக் கான் மகனைக் கைதுசெய்த அதிகாரி சமீர் பதவி பறிப்பு!

  • 46

மும்பையில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இணை கமிஷனராக இருந்த சமீர் வான்கடே, கடந்த அக்டோபர் மாதம் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் உட்பட எட்டு பேரை கப்பலில் போதைப்பொருள் உட்கொண்டதாகக் கைதுசெய்தார். இந்தக் கைது பிரச்னையை மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் பெரிய அளவில் சர்ச்சையாக்கினார். சமீர் வான்கடே பணம் பறிப்பதற்காகவே ஆர்யன் கான் கைது நாடகத்தை நடத்தியதாக நவாப் மாலிக் குற்றம்சாட்டியதோடு, சமீர் வான்கடே வேலையில் சேர போலிச் சான்றிதழ் சமர்ப்பித்ததாகவும் குற்றம்சாட்டினார்.

ஆர்யன் கான்

இந்தத் தொடர் சர்ச்சைகளால் ஆர்யன் கான் தொடர்பான வழக்கை விசாரிக்கும் பொறுப்பிலிருந்து சமீர் வான்கடே விடுவிக்கப்பட்டு, சிறப்பு விசாரணைக்குழு விசாரணையைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. சமீர் வான்கடே நேரடி வருவாய் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்.

நவாப் மாலிக்

அவர் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் அவரது பதவி இதற்கு முன்பு முடிவுக்கு வந்தபோது, பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்த வழக்கை சமீர் வான்கடே விசாரித்துக்கொண்டிருந்தார். இதனால் அவருக்கு ஆறு மாதங்கள் பதவி நீட்டிப்பு கொடுக்கப்பட்டது. ஆறு மாதங்கள் முடிவுக்கு வந்த நிலையில், மேலும் நான்கு மாதங்கள் பதவி நீட்டிப்பு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது சமீர் வான்கடே போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். டிசம்பர் 31-ம் தேதியே அவரது பதவி முடிவுக்கு வந்துவிட்டது.

சமீர் வான்கடே

இதையடுத்து சமீர் வான்கடே நேரடி வருவாய் புலனாய்வுத்துறைக்கு மீண்டும் சென்றிருக்கிறார். அவர் சுங்க வரி அல்லது ஜி.எஸ்.டி வரிப்பிரிவில் ஏதாவது ஒரு பணியில் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. மும்பையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்றியபோது, கடந்த ஆண்டு மட்டும் 117 வழக்குகளைப் பதிவு செய்து, சமீர் 234 பேரைக் கைதுசெய்தார். அவர்களில் ஆர்யன் கானும் ஒருவர். ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களையும் சமீர் வான்கடே பறிமுதல் செய்திருக்கிறார்.

Also Read: ஆர்யன் கைது; போலி சாதிச் சான்றிதழ் குற்றச்சாட்டு – நெருக்கடியில் சமீர் வான்கடே!

AIARA

🔊 Listen to this மும்பையில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இணை கமிஷனராக இருந்த சமீர் வான்கடே, கடந்த அக்டோபர் மாதம் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் உட்பட எட்டு பேரை கப்பலில் போதைப்பொருள் உட்கொண்டதாகக் கைதுசெய்தார். இந்தக் கைது பிரச்னையை மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் பெரிய அளவில் சர்ச்சையாக்கினார். சமீர் வான்கடே பணம் பறிப்பதற்காகவே ஆர்யன் கான் கைது நாடகத்தை நடத்தியதாக நவாப் மாலிக் குற்றம்சாட்டியதோடு, சமீர் வான்கடே…

AIARA

🔊 Listen to this மும்பையில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இணை கமிஷனராக இருந்த சமீர் வான்கடே, கடந்த அக்டோபர் மாதம் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் உட்பட எட்டு பேரை கப்பலில் போதைப்பொருள் உட்கொண்டதாகக் கைதுசெய்தார். இந்தக் கைது பிரச்னையை மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் பெரிய அளவில் சர்ச்சையாக்கினார். சமீர் வான்கடே பணம் பறிப்பதற்காகவே ஆர்யன் கான் கைது நாடகத்தை நடத்தியதாக நவாப் மாலிக் குற்றம்சாட்டியதோடு, சமீர் வான்கடே…

Leave a Reply

Your email address will not be published.