பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் வெள்ள பாதிப்பு நிவாரணம் வழங்குவதில் தாமதம்

பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் வெள்ள பாதிப்பு நிவாரணம் வழங்குவதில் தாமதம்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்திற்கு மழை மற்றும் வெள்ள நிவாரணமாக ரூ.4,626 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஒரு மாதத்திற்கு மேலாகியும் ஒன்றிய அரசிடமிருந்து சாதகமான பதில் வரவில்லை. அதைவிட கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த மத்திய குழு, அதன் அறிக்கையை கூட மத்திய அரசிடம் தாக்கல் செய்ததாக இன்னும் தகவல் இல்லை. தமிழகம் மற்றும் புதுவையில் ஆய்வு செய்த குழுவினர் நினைத்தால் ஒரு வாரத்தில் அறிக்கையை நிறைவு செய்து தாக்கல் செய்திருக்க முடியும். இயற்கை பேரிடர் தொடர்பான நிகழ்வுகளில், நிதியுதவி வழங்குவது குறித்த அறிக்கையை தாக்கல் செய்வதற்கு கூட இவ்வளவு தாமதிப்பது நியாயமல்ல. இத்தகைய அறிக்கைகளை தாக்கல் செய்ய காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் தலைமையில் உயர்நிலை குழுவை டெல்லிக்கு அனுப்பி தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நிதியை விரைவாக பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.5,000 நிதியுதவி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

AIARA

🔊 Listen to this சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்திற்கு மழை மற்றும் வெள்ள நிவாரணமாக ரூ.4,626 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஒரு மாதத்திற்கு மேலாகியும் ஒன்றிய அரசிடமிருந்து சாதகமான பதில் வரவில்லை. அதைவிட கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த மத்திய குழு, அதன் அறிக்கையை கூட மத்திய அரசிடம் தாக்கல் செய்ததாக இன்னும் தகவல் இல்லை. தமிழகம்…

Leave a Reply

Your email address will not be published.