பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகள் இன்று ஆரம்பம்: தென்ஆப்ரிக்கா-இந்தியா, ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதல்Dinakaran.com |27 Dec 2021on December 26, 2021 at 7:17 am

பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகள் இன்று ஆரம்பம்: தென்ஆப்ரிக்கா-இந்தியா, ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதல்Dinakaran.com |27 Dec 2021on December 26, 2021 at 7:17 am

செஞ்சுரியன்: இன்று தொடங்கும்  ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்ரிக்கா-இந்தியா, ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. கிறிஸ்துமஸ் விழாவுக்கு அடுத்த நாள் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை ‘பாக்சிங் டே’ போட்டிகள் என்று அந்நாடுகளில் அழைப்பது வழக்கம். அப்படி இன்று தொடங்க உள்ள ‘பாக்சிங் டே’ டெஸ்ட் ஆட்டங்களில் தெ.ஆப்ரிக்கா-இந்தியா, ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. தென் ஆப்ரிக்கா-இந்தியா: தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தலா 3 டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் இன்று  செஞ்சுரியனில் தொடங்குகிறது. ஒருநாள், டி20 கேப்டனாக இல்லாமல் கோஹ்லி டெஸ்ட் அணிக்கு மட்டும் கேப்டனாக இன்று முதல்முறையாக களம் காண உள்ளார். அத்துடன் ராகுல் திராவிட் தலைமை பயிற்சியாளராக பொறுப்பு ஏற்ற பிறகு வெளிநாட்டில் இந்தியா விளையாடும் முதல் டெஸ்ட் இது என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது.அதுமட்டுமல்ல தெ.ஆப்ரிக்காவில் இதுவரை நடந்த 7 டெஸ்ட் தொடர்களிலும் ஒன்றில் கூட இந்தியா வென்றதில்லை. ஒருமுறை மட்டுமே டிரா செய்துள்ளது. அதனால் இந்த முறை தொடரை வென்றாக வேண்டும் என்பதில் இந்திய அணி தீவிரமாக உள்ளது. தெ.ஆப்ரிக்காவில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான களங்கள் என்பதால் பும்ரா, ஷமி, இஷாந்த் ஆகியோருக்கு கட்டாயம் வாய்ப்பு உண்டு. அடுத்த வாய்ப்பில் உமேஷ், சிராஜ், ஷர்துல் ஆகியோர் உள்ளனர். சுழற்பந்து வீச்சாளர்களில் அஷ்வின், ஜெயந்த் களம் காணலாம்.பேட்ஸ்மேன்களில் கோஹ்லி, ராகுல், ரிஷப், மாயங்க் ஆகியோருக்கு கட்டாயம் வாய்ப்பு கிடைக்கும். பந்து வீச்சாளர்கள் 5பேருக்கு வாய்ப்பு என நேற்று முன்தினம் ராகுல் உறுதி படுத்தியுள்ளார். ஆடும் அணியில் மீதி 2 இடங்களுக்கான போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர், ஹனுமா விகாரி, சீனியர்கள் ரகானே, புஜாரா ஆகியோருடன் ரோகித் சர்மாவுக்கு பதில் இடம்பிடித்த பிரியங்க் பாஞ்சால் ஆகியோர் காத்திருக்கின்றனர். இந்த பிரச்னையெல்லாம் டீன் எல்கர் தலைமையிலான தென் ஆப்ரிக்கா அணிக்கு இல்லை. உள்ளூரில் விளையாடுவதும், பழைய வெற்றி வரலாறுகளும் அந்த அணிக்கு சாதகமான அம்சங்கள். கூடவே டி காக், ரபாடா, கேசவ், கீகன், என்ஜிடி மார்க்ரம், பவுமா ஆகியோர் அணிக்கு கூடுதல் பலம். சமபலத்துடன் இரு அணிகளும், வெற்றியுடன் தொடங்க போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.ஆஸ்திரேலியா-இங்கிலாந்து: ஆஸியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட்களில் தோற்று 0-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.இந்நிலையில் மெல்போர்னில் இன்று  3வது டெஸ்ட்  பாக்சிங் டே டெஸ்ட்டாக தொடங்குகிறது. இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோ ரூட், டேவிட் மாலன் மட்டும்தான் தொடர்ந்து சிறப்பாக விளையாடுகின்றனர். பட்லர், ஸ்டோக்ஸ், பர்ன்ஸ், வோக்ஸ் என மற்றவர்கள் சுமாராகதான் விளையாடுகிறார்கள். அதனை பயன்படுத்தி ஆஸி அணி தொடரை கைப்பற்ற முயலும். கேப்டன் கம்மின்ஸ் மீண்டும் அணிக்கு திரும்புவது ஆஸிக்கு கூடுதல் பலம். ஏற்கனவே அந்த அணியில் வார்னர், லாபுஷேன், ஸ்மித், ஸ்டார்க், மார்கஸ் ஆகியோர் தொடர்ந்து அசத்தி வருகின்றனர். எந்த அணி கூடுதலாக அசத்துகிறதோ அந்த அணிக்கு வெற்றி கிறிஸ்துமஸ் பரிசாக கிடைக்கும்.* இந்தியாகோஹ்லி (கேப்டன்), ராகுல் (து.கேப்டன்), ரகானே, மயாங்க், அஷ்வின்,  ஷமி, பூம்ரா, சிராஜ், ரிஷப் (விக்கெட் கீப்பர்),  புஜாரா, ஷ்ரேயாஸ், விருத்திமான் (விக்கெட் கீப்பர்), இஷாந்த், ஹனுமா, உமேஷ், ஷர்துல், ஜெயந்த், பிரியங்க் பாஞ்சால்(அறிமுகம்)* தென் ஆப்ரிக்காடீன் எல்கர்(கேப்டன்), பவுமா(து.கேப்டன்), டி காக், சாரெல், ஹெண்ட்ரிக்ஸ், மார்கோ, சிசாண்டா, கேசவ், மார்க்ரம், முல்டெர், என்ஜிடி, ஆலிவியர், கீகன், ரபாடா, ரிக்கெல்டன், கிளென்டன், டூசன், கேல் பிரநிலன் சுப்ராயன்(அறிமுகம்).இதுவரை…* இந்த 2 அணிகளும் இதுவரை 14 டெஸ்ட் தொடர்களில் விளையாடி உள்ளன.* தென் ஆப்ரிக்கா 7 தொடர்களிலும், இந்தியா 4 தொடர்களிலும் வெற்றிப் பெற்றுள்ளன. மீதி 3 தொடர்கள் டிராவில் முடிந்தன.* தென் ஆப்ரிக்காவில் நடந்த 7 தொடர்களில்  6 தொடர்களை தெ.ஆப்ரிக்கா கைப்பற்ற, ஒரு தொடர் டிராவில்  முடிந்துள்ளது.* இந்தியாவில் நடந்த 7 தொடர்களில் இந்தியா 4 தொடர்களையும், தெ.ஆப்ரிக்கா ஒரு தொடரையும் வென்றுள்ளன.  மேலும் 2தொடர்கள் டிராவில்  முடிந்தன.* மொத்தத்தில் இரு அணிகளும் 39 டெஸ்ட்களில்  மோதியுள்ளன.* அவற்றில்  தெ.ஆப்ரிக்கா 15, இந்தியா 14  டெஸ்ட்களில் வென்றுள்ளன.  எஞ்சிய 10 டெஸ்ட்கள் டிராவாகின.* இந்த இரு அணிகள் கடைசியாக மோதிய 5 டெஸ்ட்களில் 4-1 என்ற கணக்கில்  இந்தியா முன்னிலை வகிக்கிறது. அதிலும் கடைசி 4 டெஸ்டகளில் இந்தியா தொடர்ந்து வெற்றியை வசப்படுத்தி உள்ளது.கொரோனா கார்னர்* ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் தொடங்க உள்ள  ஆஸி ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க வரும் வீரர்கள் எல்லோரும் தடுப்பூசி போட்டால்தான் அனுமதி  என விக்டோரியா மாநில அரசு கூறியது. உலகின் நெம்பர் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் , ‘தடுப்பூசி போடுவது, போடாமல் இருப்பது தனிப்பட்ட மனிதனின் உரிமை. அதை வெளியில் சொல்ல வேண்டிய அவசியமில்லை’என்றார். அதனால் ஊசி போடாவிட்டால் 14நாட்கள் ‘குவாரன்டைன்’ என அரசு இறங்கி வந்தது. ஆனாலும் தனது முடிவில் இருந்து மாறாத  ஜோகோவிச், ஆஸி ஓபனுக்கு முன்பு சிட்னியில் நடைெறும் ஆடவருக்கான ஏடிபி கோப்பை போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதனால் அவர் ஆஸி ஓபனில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.* வீரர்களுக்கு கொரோனா தொற்று காரணமாாக  இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடர் பாதிக்கப்பட்டுள்ளது.  அதனால் அணி மேலாளர்களுடன்  லீக் நிர்வாகம்  பேசியது. அதனை  டோட்டன்ஹாம் மேலாளர் அன்டோனியா, ‘இந்த ஆலோசனை நேரத்தை வீணாக்கும் வேலை’ என்று கிண்டல் செய்துள்ளார். ஆனால் மான்செஸ்டர் யுனைடட்  மேலாளர் ரல்ஃப் ரங்கிங், ‘வீரர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

AIARA

🔊 Listen to this செஞ்சுரியன்: இன்று தொடங்கும்  ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்ரிக்கா-இந்தியா, ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. கிறிஸ்துமஸ் விழாவுக்கு அடுத்த நாள் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை ‘பாக்சிங் டே’ போட்டிகள் என்று அந்நாடுகளில் அழைப்பது வழக்கம். அப்படி இன்று தொடங்க உள்ள ‘பாக்சிங் டே’ டெஸ்ட் ஆட்டங்களில் தெ.ஆப்ரிக்கா-இந்தியா, ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. தென் ஆப்ரிக்கா-இந்தியா: தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தலா 3 டெஸ்ட், ஒருநாள் தொடர்களில்…

AIARA

🔊 Listen to this செஞ்சுரியன்: இன்று தொடங்கும்  ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்ரிக்கா-இந்தியா, ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. கிறிஸ்துமஸ் விழாவுக்கு அடுத்த நாள் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை ‘பாக்சிங் டே’ போட்டிகள் என்று அந்நாடுகளில் அழைப்பது வழக்கம். அப்படி இன்று தொடங்க உள்ள ‘பாக்சிங் டே’ டெஸ்ட் ஆட்டங்களில் தெ.ஆப்ரிக்கா-இந்தியா, ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. தென் ஆப்ரிக்கா-இந்தியா: தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தலா 3 டெஸ்ட், ஒருநாள் தொடர்களில்…

Leave a Reply

Your email address will not be published.