பள்ளிச் சுவர் விழுந்து மாணவர்கள் பலியான விவகாரம்; விளக்கம் கேட்டு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

நெல்லை சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 17-ம் தேதி காலை இடைவேளை நேரத்தின்போது சுவர் இடிந்து விழுந்ததில் சுதீஷ், அன்பழகன், விஜயரஞ்சன் ஆகிய மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். நான்கு மாணவர்கள் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

சுவர் இடிந்த பள்ளியைப் பார்வையிடும் கல்வித்துறை அமைச்சர்

தமிழக அரசு சார்பாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 3 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டன. அத்துடன், தமிழகம் முழுவதும் பள்ளிகளிலிருக்கும் உறுதியற்ற கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இடிக்கப்பட்டுவருகின்றன.

பள்ளிச் சுவர் இடிந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவுசெய்திருக்கிறது. அத்துடன், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு விபத்து தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பியிருக்கிறது.

மனித உரிமை ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்

இது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் அனுப்பியிருக்கும் நோட்டீஸில், “18-ம் தேதி பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில் பள்ளிச் சுவர் இடிந்து மூன்று மாணவர்கள் பலியாகி, நான்கு மாணவர்கள் காயமடைந்தது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருக்கிறோம். இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரும், மாவட்ட ஆட்சியரும் விளக்கம் அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பள்ளிச் சுவர் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருப்பது இந்த விவகாரத்தில் மீண்டும் சூட்டைக் கிளப்பியிருக்கிறது.

Also Read: நெல்லை: பள்ளிச் சுவர் இடிந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்… தலைமை ஆசிரியை உள்ளிட்ட மூவர் கைது!

AIARA

🔊 Listen to this நெல்லை சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 17-ம் தேதி காலை இடைவேளை நேரத்தின்போது சுவர் இடிந்து விழுந்ததில் சுதீஷ், அன்பழகன், விஜயரஞ்சன் ஆகிய மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். நான்கு மாணவர்கள் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. சுவர் இடிந்த பள்ளியைப் பார்வையிடும் கல்வித்துறை அமைச்சர் தமிழக அரசு சார்பாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 3 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டன. அத்துடன், தமிழகம் முழுவதும் பள்ளிகளிலிருக்கும் உறுதியற்ற…