பரமக்குடி: `1098’ எண்ணில் வந்த அழைப்பு! -13 மாணவிகளின் பாலியல் புகாரால் சிக்கிய அரசுப்பள்ளி ஆசிரியர்

பாலியல் ரீதியில் துன்புறுத்தி வருவதாக பள்ளி மாணவிகள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து இரு ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அதில் ஒருவரை கைது செய்துள்ள சம்பவம் பரமக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் தொல்லை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், கடந்த டிசம்பர் 7-ம் தேதி மாவட்ட குழந்தைகள் நலக்குழு சார்பாக பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது பாலியல் ரீதியாக யாராவது துன்புறுத்தினால் `1098’ என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என ஆலோசனை கூறப்பட்டது.

சிறார் வதை

இதை தொடர்ந்து இப்பள்ளியில் பயிலும் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவிகள் சிலர் குழந்தைகள் பாதுகாப்பு இலவச எண்ணை தொடர்பு கொண்டு, “கணித ஆசிரியர் ஆல்பர்ட் வளவன், சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜ் ஆகியோர் அடிக்கடி தங்களைத்தொட்டும், இரட்டை அர்த்தத்திலும் பேசுகின்றனர். வீட்டிற்கு சென்ற பிறகு போனில் தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்கின்றனர்” என புகார் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வசந்தகுமார் சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை செய்தனர். `மாணவிகள் புகார் உண்மை என உறுதியானதால் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர்

புகாரின் அடிப்படையில் ஆசிரியர்கள் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகாருக்குள்ளான சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜை கைது செய்துள்ளனர்.

தலைமறைவாகியுள்ள மற்றொரு ஆசிரியர் ஆல்பர்ட் வளவனை தேடி வருகின்றனர். உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 13 மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில் வேறு மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளார்களா எனவும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.

AIARA

🔊 Listen to this பாலியல் ரீதியில் துன்புறுத்தி வருவதாக பள்ளி மாணவிகள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து இரு ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அதில் ஒருவரை கைது செய்துள்ள சம்பவம் பரமக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் தொல்லை ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், கடந்த டிசம்பர் 7-ம் தேதி மாவட்ட குழந்தைகள் நலக்குழு சார்பாக பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பாலியல் ரீதியாக யாராவது துன்புறுத்தினால் `1098’…