பயிற்சி முகாமுக்கு எதிர்ப்பு.. ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மீது வழக்கு பதிவு.. கோவையில் நடந்தது என்ன?
கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் நடந்தது. இதற்கு நாம் தமிழர் கட்சி, தந்தை பெரியார் திராவிட கழகம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சுப.வீரபாண்டியன் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டார். இதற்கு பாஜக இந்து முன்னணி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் பயிற்சி முகாமுக்கு ஆதரவாக கருத்தை தெரிவித்தார்.
கு. ராமகிருஷ்ணன்
பயிற்சி நடைபெறும் பள்ளியை முற்றுகையிட்ட த.பெ.திக கு.ராமகிருஷ்ணன், நாம் தமிழர் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர். அடுத்தடுத்து போராட்டங்களால் அங்கு சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, கோவை காவல்துறை துணை ஆணையர் ஜெயச்சந்திரன் அங்கு பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்ய சென்றார். அப்போது ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்பினர் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தள்ளு முள்ளு
இது தொடர்பாக பீளமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜ்குமார் புகார் அளித்தார். அதனடிப்படையில், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மீது வழக்கு பதிந்தனர்.

🔊 Listen to this கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் நடந்தது. இதற்கு நாம் தமிழர் கட்சி, தந்தை பெரியார் திராவிட கழகம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சுப.வீரபாண்டியன் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டார். இதற்கு பாஜக இந்து முன்னணி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்.எஸ்.எஸ்…