பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!!!

பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!!!

சென்னை: கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 8 லட்சம் ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதாக செய்திகள் வெளியாகிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். நெல் கொள்முதல் நிலையங்களை முறையாக பாதுகாக்க தவறியதால் சுமார் 1 லட்சம் நெல் மூட்டைகள் வீணாகியிருப்பதாக செய்திகள் வந்திருப்பதாக குறிப்பிட்டிருக்கும்  எடப்பாடி பழனிசாமி அரசின் மெத்தன போக்கை கண்டிப்பதாக கூறியுள்ளார். கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வேளாண்துறை அதிகாரிகளை நேரடியாக அனுப்பி பாதிப்புகளை மதிப்பிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மத்தியஅரசு நிவாரணநிதியை வழங்கவில்லை என்று காரணம் கூறாமல் உடனடியாக சேதமடைந்த நெற்பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 40,000 ரூபாயும், மறு சாகுபடி செய்ய செலவாக 12,000 ரூபாயும் வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார். மேலும் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையை உடனடியாக பெற்றுத் தரவேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.            

AIARA

🔊 Listen to this சென்னை: கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 8 லட்சம் ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதாக செய்திகள் வெளியாகிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். நெல் கொள்முதல் நிலையங்களை முறையாக பாதுகாக்க தவறியதால் சுமார் 1 லட்சம் நெல் மூட்டைகள் வீணாகியிருப்பதாக செய்திகள் வந்திருப்பதாக குறிப்பிட்டிருக்கும்  எடப்பாடி…

Leave a Reply

Your email address will not be published.