நெல்லை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற விவசாயி! – தடுத்து நிறுத்திய போலீஸார்

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. விவசாயியான அவருக்கு தெற்கு வீரவநல்லூர், மாடன் குளத்தில் இரண்டரை ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் விவசாயம் செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்திவருகிறார்.

Also Read: குளத்தில் குடியிருப்பு; ஏரியில் விவசாயம்; சாட்டையை எடுக்குமா நீதிமன்றம்?!

நெல்லை மாவட்டத்தில் அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்திலுள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்துவருகிறது. விவசாயி சுப்பையாவின் விவசாய நிலத்துக்கு அருகேயுள்ள கூத்தாடிகுளமும் நிரம்பி வழிகிறது.

கூத்தாடிகுளத்திலிருந்து வெளியேறும் உபரிநீர் செல்லும் மடைப் பகுதியை, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அதிகாரிகள் செப்பனிட்டுள்ளனர். அப்போது மறுகால் தண்ணீர் செல்லும் பாதையை இரண்டு அடி உயர்த்தியிருக்கிறார்கள். அப்படி உயர்த்தினால் அருகிலுள்ள வயல்கள் தண்ணீருக்குள் மூழ்கும் என்று அப்போதே விவசாயி சுப்பையா, அரசு அதிகாரிகளிடம் முறையிட்டிருக்கிறார். ஆனால் அதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

உடலைக் கழுவிவிட்ட தீயணைப்புத்துறையினர்

இந்த நிலையில், தற்போது கூத்தாடிகுளம் நிரம்பியிருக்கிறது. மறுகால் செல்லும் வழியை உயர்த்திவிட்டதால் அருகிலிருக்கும் வயல்கள் அனைத்தும் தண்ணீருக்குள் மூழ்கிக்கிடக்கின்றன. தான் வயலில் நெல் நடவு செய்திருந்த நிலையில், அனைத்தும் தண்ணீருக்குள் மூழ்கியதால் சுப்பையா வருத்தமடைந்தார்.

பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், தன் வயல் தண்ணீரில் மூழ்கியது தொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் எனப் பலரிடமும் முறையிட்டிருக்கிறார். அத்துடன், பொதுப்பணித்துறை அதிகாரிகளையும் சந்தித்து கோரிக்கை வைத்திருக்கிறார்.

சுப்பையா, விவசாயிவிளை நிலைம் தண்ணீருக்குள் மூழ்கியது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க விவசாயி சுப்பையா இன்று வந்தார். மிகுந்த வேதனையில் இருந்த அவர், வரும்போதே கையுடன் மண்ணெண்ணெய் கேனையும் எடுத்து வந்திருக்கிறார். திடீரென அவர் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீஸார் அவரைத் தடுத்து நிறுத்தி, கையிலிருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்து வீசினர்.

அதற்குள் அவர் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டுவிட்டதால், போலீஸாரும் தீயணைப்புத்துறையினரும் சேர்ந்து அவர் உடலில் தண்ணீர்விட்டு மண்ணெண்ணெயைக் கழுவிவிட்டனர். பின்னர் மனு வாங்கிக்கொண்டிருந்த மாவட்ட வருவாய் அலுவலரைச் சந்திக்க அழைத்துச் சென்றனர். அவரிடம் தனக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் குறித்து சுப்பையா விளக்கினார்.

விவசாயி சுப்பையா

அவரின் கோரிக்கையைக் கேட்ட மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், பொதுப்பணித்துறை செயற்பொறியாளரை அழைத்துப் பேசினார். பின்னர் சம்பவ இடத்துக்குச் சென்று, நேரில் விசாரணை செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்த செங்கோட்டையைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தார். அதில் குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

அதன் பின்னர் பலத்த சோதனைக்குப் பின்னரே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் செல்ல முடியும். அப்படியிருந்தும், விவசாயி சுப்பையா மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்ற சம்பவம், பாதுகாப்புக் குறைபாட்டைச் சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. அதனால் அவர் மண்ணெண்ணெய் கொண்டு வந்தது எப்படி என்பது பற்றி காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்

🔊 Listen to this நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. விவசாயியான அவருக்கு தெற்கு வீரவநல்லூர், மாடன் குளத்தில் இரண்டரை ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் விவசாயம் செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்திவருகிறார். Also Read: குளத்தில் குடியிருப்பு; ஏரியில் விவசாயம்; சாட்டையை எடுக்குமா நீதிமன்றம்?! நெல்லை மாவட்டத்தில் அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்திலுள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்துவருகிறது. விவசாயி சுப்பையாவின் விவசாய நிலத்துக்கு…

🔊 Listen to this நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. விவசாயியான அவருக்கு தெற்கு வீரவநல்லூர், மாடன் குளத்தில் இரண்டரை ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் விவசாயம் செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்திவருகிறார். Also Read: குளத்தில் குடியிருப்பு; ஏரியில் விவசாயம்; சாட்டையை எடுக்குமா நீதிமன்றம்?! நெல்லை மாவட்டத்தில் அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்திலுள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்துவருகிறது. விவசாயி சுப்பையாவின் விவசாய நிலத்துக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *