நெப்போலியன் வாள் ரூ.21 கோடிக்கு ஏலம்

நியூயார்க்: மாவீரன் நெப்போலியன் பல்வேறு நாடுகள் மீது படையெடுத்து வெற்றி பெற்றுள்ளார். பிரான்சை சேர்ந்த அவர், ஏராளமான நாடுகள் மீது படையெடுத்தார். கடந்த 1799ம் ஆண்டு நெப்போலியன் ஆட்சி கவிழ்ப்பை நிகழ்த்தியபோது எடுத்து செல்லப்பட்ட உடை வாள், அவரது 5 ஆயுதங்கள் நேற்று முன்தினம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏலம் விடப்பட்டது. ராக் ஐலேண்ட் நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது. ரூ.11 கோடி முதல் ரூ.26 கோடி வரை மதிப்பீடு செய்யப்பட்டு இருந்தது. கடந்த 3ம் தேதி உடை வாள் மற்றும் ஆயுதங்கள் போன் மூலமாக விற்பனையானது. மொத்தம் ரூ.21 கோடிக்கு நெப்போலியனின் வாள் மற்றும் 5 ஆயுதங்கள் ஏலம் எடுக்கப்பட்டது. அரசு ஆயுத தொழிற்சாலையில் இயக்குரான இருந்த நிக்கோலஸ் நோயல் பவுடெட் என்பவரால் இந்த வாள் மற்றும் ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டது. அரசனாக முடி சூட்டப்பட்ட பின் நெப்போலியன் அந்த வாளை ஜெனரல் ஜீன் ஆன்டோச் ஜூனட்க்கு வழங்கினார். ஆனால், ஜூனட்டின் மனைவி தனது கடன்களை அடைப்பதற்காக இவற்றை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். லண்டன் அருங்காட்சிகயம் இதனை மீட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கலெக்டர் இதன் கடைசி உரிமையாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

AIARA

🔊 Listen to this நியூயார்க்: மாவீரன் நெப்போலியன் பல்வேறு நாடுகள் மீது படையெடுத்து வெற்றி பெற்றுள்ளார். பிரான்சை சேர்ந்த அவர், ஏராளமான நாடுகள் மீது படையெடுத்தார். கடந்த 1799ம் ஆண்டு நெப்போலியன் ஆட்சி கவிழ்ப்பை நிகழ்த்தியபோது எடுத்து செல்லப்பட்ட உடை வாள், அவரது 5 ஆயுதங்கள் நேற்று முன்தினம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏலம் விடப்பட்டது. ராக் ஐலேண்ட் நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது. ரூ.11 கோடி முதல் ரூ.26 கோடி வரை மதிப்பீடு செய்யப்பட்டு…