`நூதன மோசடியில் கில்லாடியான சீட்டிங் பாபு!’ – குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

  • 23

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் உள்ள தாரணி நகரைச் சேர்ந்தவர் ரெத்தினசம்பந்தம். இவரின் மகன் ஆர்.எஸ். பாபு என்கிற சீட்டிங் பாபு. 42 வயதான சீட்டிங் பாபு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள். காவல்நிலையத்தில் ரெளடி பட்டிலில் இடம்பெற்று இருந்த இவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறிப்பாக, குடவாசல் காவல் சரக பகுதிகளில் பல்வேறு நபர்களை ஏமாற்றி கார் திருட்டு, சொத்துக்களை அபகரித்தல், அச்சுறுத்தல் செய்தல் போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக காவல்துறையினர் குற்றம்சாட்டுகிறார்கள்.

இதுகுறித்து பேசும் திருவாரூர் மாவட்ட காவல்துறையினர், “இவரோட ஒரிஜினல் பேரு பாபு தான். மத்தவங்களை நம்ப வச்சி சீட்டிங் செய்றதுல இவர் மிகப்பெரிய கில்லாடி. பார்க்குறதுக்கு எப்பவுமே நல்லா வெள்ளை நிறத்தில் டிரஸ் பண்ண்க்கிட்டு டிப்-டாப்பா இருப்பார். யாரையாவது ஒருத்தரை குறி வச்சி, சீட்டிங் செய்யணும்னு முடிவெடுத்துட்டாருனா, நல்லா சாமர்த்தியமா பேசி தன்னை நம்ப வச்சி, காரியத்தை சாதிச்சிடுவார். இதனாலேயே இவரை இந்த பகுதி மக்கள் சீட்டிங் பாபுனு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.

பாபு

சில வருசங்களுக்கு முன்னாடி சீட்டிங் பாபு ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழில் செஞ்சிக்கிட்டு இருந்தார். அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம், விடுதலை சிறுத்தைகள், விடுதலை தமிழ் புலிகள் உள்ளிட்ட கட்சிகள்ல பல முக்கிய பொறுப்புகள் எல்லாம் இருந்திருக்கார். அதுக்கு பிறகு வெளிநாட்டுல வேலை வாங்கி தர்றதா, பலர்கிட்ட பணம் மோசடி செய்யுறதா புகார்கள் வந்துச்சு. கட்டப்பஞ்சாயத்துகள்லயும் ஈடுபட்டுக்கிட்டு இருந்தார்.

இதுக்கிடையிலதான் நூதனமான முறையில் மத்தவங்களோட கார்களை அபகரிச்சி மோசடிகள்ல ஈடுபட்டார். விலையுயர்ந்த சொகுசு கார்கள் வச்சிருக்கக்கூடிய பெரிய பணக்காரங்களை அணுகி, “நான் டிராவல்ஸ் நடத்திக்கிட்டு இருக்கேன். மாசமாசம் உங்களுக்கு கரெக்டா பணம் கொடுத்துடுவேன்னு சொல்லி காரை ஓட்டிக்கிட்டு வந்துடுவார். வாக்குறுதி கொடுத்த மாதிரியே மாசமாசம் ஆனா ரொம்ப குறைவான தொகையை கார் ஓனருக்கு கொடுத்துடுவார். ஆனால் அந்த சொகுசு காரை, சீட்டிங் பாபு, வேறொரு நபர்கிட்ட லீஸூக்கு கொடுத்து பல லட்சம் ரூபாய் பணம் வாங்கிடுவார்.

லீஸூங்கறதுனால ஆர்.சி புக் கேட்கமாட்டாங்க. சில மாசங்களுக்கு முன்னாடி தான் இவரோட விநோத மோசடி வெளிச்சத்துக்கு வந்துச்சு. சீட்டிங் பாபுக்கிட்ட தன்னோட காரை வாடகைக்கு கொடுத்திருந்த நபர், வெளிமாநிலத்துல, வேற யாரோ ஒருத்தர் தன்னோட காரை ஓட்டிக்கிட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைஞ்சி விசாரிச்சிருக்கார்.

திருவாரூர் காவல்துறை

அப்பதான் அவருக்கு இந்த நூதன மோசடி தெரிய வந்திருக்கு. அது தொடர்பாக, காவல்நிலையத்துல வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிட்டிங்பாபு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன்ல வெளியில் வந்த பிறகும் இவர்மேல புகார்கள் வந்துக்கிட்டே இருந்துச்சு. இதனால்தான் இவரை குண்டர் சட்டத்துல சிறையில அடைக்க, திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கார்’’ என தெரிவித்தார்கள்.

🔊 Listen to this திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் உள்ள தாரணி நகரைச் சேர்ந்தவர் ரெத்தினசம்பந்தம். இவரின் மகன் ஆர்.எஸ். பாபு என்கிற சீட்டிங் பாபு. 42 வயதான சீட்டிங் பாபு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள். காவல்நிலையத்தில் ரெளடி பட்டிலில் இடம்பெற்று இருந்த இவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறிப்பாக, குடவாசல் காவல் சரக பகுதிகளில் பல்வேறு நபர்களை ஏமாற்றி கார் திருட்டு, சொத்துக்களை அபகரித்தல், அச்சுறுத்தல்…

🔊 Listen to this திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் உள்ள தாரணி நகரைச் சேர்ந்தவர் ரெத்தினசம்பந்தம். இவரின் மகன் ஆர்.எஸ். பாபு என்கிற சீட்டிங் பாபு. 42 வயதான சீட்டிங் பாபு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள். காவல்நிலையத்தில் ரெளடி பட்டிலில் இடம்பெற்று இருந்த இவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறிப்பாக, குடவாசல் காவல் சரக பகுதிகளில் பல்வேறு நபர்களை ஏமாற்றி கார் திருட்டு, சொத்துக்களை அபகரித்தல், அச்சுறுத்தல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *