நீலகிரி: தேங்காய் மட்டைகளுக்குள் 75 மூட்டை குட்கா! – கடத்தல் கும்பல் சிக்கியது எப்படி?

கர்நாடக மாநிலம், குண்டல்பேட் பகுதியிலிருந்து நீலகிரி வழியாக, கோவை மாவட்டத்துக்கு லாரி ஒன்றில் பல டன் அளவுக்குத் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவதாக நீலகிரி காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் வந்திருக்கிறது. இந்தத் தகவலின் அடிப்படையில் வாகன சோதனையை தீவிரப்படுத்தி ஆய்வு மேற்கொண்டுவந்தனர்.

தேங்காய் மட்டைகளுக்குள் கடத்திவரப்பட்ட 75 மூட்டை புகையிலைப் பொருள்கள்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் குன்னூர் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கர்நாடகாவிலிருந்து தேங்காய் மட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரியின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் ஆய்வு செய்தனர். தேங்காய் மட்டைகளுக்கு இடையே சில மூட்டைகள் மறைத்துவைத்திருப்பதைக் கண்டு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தபோது அதனுள் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.

தேங்காய் மட்டைகளுக்குள் கடத்திவரப்பட்ட 75 மூட்டை புகையிலைப் பொருள்கள்

இது குறித்து குன்னூர் காவல்துறையினர், “கர்நாடக மாநிலம், குண்டல்பெட்டிலிருந்து குன்னூர் வழியாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு குட்கா மூட்டைகளைக் கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் இருக்கும். குட்கா கடத்திய குண்டல்பெட் பகுதியைச் சேர்ந்த ராஜூ, குருராஜி, சுரேஷ் ஆகிய மூன்று பேரைக் கைதுசெய்து குன்னூர் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினோம். குட்கா கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறோம்” என்றனர்.

🔊 Listen to this கர்நாடக மாநிலம், குண்டல்பேட் பகுதியிலிருந்து நீலகிரி வழியாக, கோவை மாவட்டத்துக்கு லாரி ஒன்றில் பல டன் அளவுக்குத் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவதாக நீலகிரி காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் வந்திருக்கிறது. இந்தத் தகவலின் அடிப்படையில் வாகன சோதனையை தீவிரப்படுத்தி ஆய்வு மேற்கொண்டுவந்தனர். தேங்காய் மட்டைகளுக்குள் கடத்திவரப்பட்ட 75 மூட்டை புகையிலைப் பொருள்கள் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் குன்னூர் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கர்நாடகாவிலிருந்து தேங்காய் மட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரியின் மீது…