நீலகிரியில் 10 மடங்கு உயர்ந்த சைனீஸ் காய்கறிகளின் விலை; என்ன காரணம்?

தேயிலை, காபி போன்ற தோட்டப்பயிர்கள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் இங்கிலீஷ் வெஜிடபிள்ஸ் எனப்படும் கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், பட்டாணி, டர்னிப் போன்ற மலை காய்கறிகளும் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. அதே வேளையில் சைனீஸ் காய்கறிகளான சைனீஸ் கேபேஜ், புரூக்கோலி, ஐஸ்பெர்க், செலரி, லீக்ஸ், பார்சிலி, லெட்யூஸ், ஸ்பிரிங் ஆனியன், சுகுணி, ரெட் கேபேஜ் போன்றவற்றை பயிர் செய்து சந்தைப்படுத்தும் பணிகளில் சமீப காலமாக விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உச்சத்தைத் தொட்ட சைனீஸ் காய்கறிகளின் விலை

Also Read: தக்காளி கிலோ ₹120, வெண்டைக்காய் ₹100; உச்சத்தில் காய்கறி விலை; எப்போது குறையும்?

நீலகிரியில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக சைனீஸ் காய்கறி விவசாயமும் கடுமையாக பாதிப்படைந்தது. இதனால், சந்தைக்கு வரத்து வீதமும் வெகுவாக குறைந்துள்ளது. இவற்றின் விலையும் நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருகிறது. ஊட்டியில் உள்ள மொத்த ஏல மையத்தில் வழக்கமாக 40 முதல் 50 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த சுகுணி தற்போது ரூ.120 ரூபாய்க்கு ஏலம் போகிறது. ரூ.70-க்கு விற்பனையாகி வந்த புரூக்கோலி தற்போது ரூ.220-க்கும், ரூ.40 முதல் 50-க்கு விற்பனையாகி வந்த ஐஸ் பெர்க் ரூ.230-க்கும், ரூ.30 முதல் 40-க்கு விற்பனையாகி வந்த செலரி ரூ.200 முதல் 220 வரையிலும், ரூ.40-க்கு விற்பனையான லீக்ஸ் ரூ.300க்கும், பார்ஸ்லி ரூ.380-க்கும், லெட்யூஸ் ரூ.200 வரையும் விலை உயர்ந்துள்ளது.

உச்சத்தை தொட்ட சைனீஸ் காய்கறிகளின் விலை உயர்வு குறித்து நம்மிடம் பேசிய காய்கறி மண்டி உரிமையாளர் ஒருவர், “ஊட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் சைனீஸ் காய்கறிகள் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. இந்த வகை காய்கறிகள் நட்சத்திர உணவகங்களில் துரித உணவுகள் தயாரிக்க அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. நீலகிாியில் விளைவிக்க கூடிய சைனீஸ் காய்கறிகள் கேரளா, கர்நாடகா, டெல்லி போன்ற பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.

உச்சத்தைத் தொட்ட சைனீஸ் காய்கறிகளின் விலை

Also Read: How to series: வீட்டிலேயே புதினா செடி வளர்ப்பது எப்படி? | How to grow mint leaves at home?

மழை காரணமாக சரக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவற்றின் விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ளதால் அதிக விலை கொடுத்து வாங்க வெளி மாநில வியாபாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. குறைந்த அளவிலேயே கொள்முதல் செய்து வருகின்றனர்.பெரும்பாலான விவசாயிகளிடம் மகசூல் இல்லை என்பதால் அவர்களுக்கும் எந்த லாபமும் இல்லை” என்றார்.

AIARA

🔊 Listen to this தேயிலை, காபி போன்ற தோட்டப்பயிர்கள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் இங்கிலீஷ் வெஜிடபிள்ஸ் எனப்படும் கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், பட்டாணி, டர்னிப் போன்ற மலை காய்கறிகளும் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. அதே வேளையில் சைனீஸ் காய்கறிகளான சைனீஸ் கேபேஜ், புரூக்கோலி, ஐஸ்பெர்க், செலரி, லீக்ஸ், பார்சிலி, லெட்யூஸ், ஸ்பிரிங் ஆனியன், சுகுணி, ரெட் கேபேஜ் போன்றவற்றை பயிர் செய்து சந்தைப்படுத்தும் பணிகளில் சமீப காலமாக விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உச்சத்தைத் தொட்ட சைனீஸ்…