நியூயார்க் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து… 9 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்த சோகம்!

  • 5

நியூயார்க் நகரில் உள்ள பிரோன்க்ஸ்(Bronx) என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் பழுதான மின்சார ஹீட்டர்( Electric Space Heater) ஏற்படுத்திய தீ விபத்த்தில் 9 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர் என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மின்சாரம் மூலம் ஏற்பட்ட தீ சட்டென்று இரண்டாம் மற்றும் மூன்றாம் தளத்திற்கு பரவியது என்று FDNY ( Fire Department of New York) ஆணையர் டேனியல் தெரிவித்தார்.

நியூயார்க் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

இந்த தீ விபத்தால் கரும் புகைகள் குடியிருப்பில் ஏற்பட்டு குடியிருப்பின் ஜன்னல்கள் வழியே வெளிவந்தன. இந்த தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்ட அந்த குடியிருப்பில் வசிக்கும் ஒருவர், “அடிக்கடி தவறான எச்சரிக்கை ( False Alarm) வந்ததால் இந்த முறையும் அப்படி இருக்கும் என்று எண்ணி விட்டுவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

மேயர் எரிக் ஆடமின் மூத்த ஆலோசகர் ஸ்டீபன் ரிங்கேல், இறப்பு எண்ணிக்கையை உறுதி செய்தார். தீ விபத்தால் உயிரிழந்த குழந்தைகளின் 16 மற்றும் அதற்கு குறைவான வயதுடையவர்கள் என்றும், பெரியவர்கள் 13 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று ரிங்கேல் கூறினார்.

நியூயார்க் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

மேலும் 60-க்கும் மேற்பட்டோர் இந்த தீ விபத்தால் காயமடைந்து உள்ளதாகவும், மேலும் பலர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.

`இந்த தீவிபத்து மிகவும் கொடூரமானது’ என்று மேயர் எரிக் ஆடம் கூறியுள்ளார். ஒவ்வொரு தளத்திலும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டுக் கொடுத்துள்ளனர் என்று ஆணையர் கூறினார்.

குடியிருப்பின் கதவுகள் திறந்திருந்த நிலையில், அந்தத் தீ வேகமாக குடியிருப்பின் மேல்நோக்கி புகையாக பரவி இருக்கிறது என்று தீயணைப்பு வீரர்கள் கூறியுள்ளனர். இந்த தீ விபத்து சந்தேகத்திற்குரியதாக இல்லை என்றாலும் இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

நியூயார்க் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

பிலடெல்பியாவில்(Philadelphia) நடந்த தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்து உள்ள சில தினங்களில், நியூயார்க்கில் மீண்டும் ஒரு தீ விபத்து ஏற்பட்டிருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

🔊 Listen to this நியூயார்க் நகரில் உள்ள பிரோன்க்ஸ்(Bronx) என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் பழுதான மின்சார ஹீட்டர்( Electric Space Heater) ஏற்படுத்திய தீ விபத்த்தில் 9 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர் என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மின்சாரம் மூலம் ஏற்பட்ட தீ சட்டென்று இரண்டாம் மற்றும் மூன்றாம் தளத்திற்கு பரவியது என்று FDNY ( Fire Department of New York) ஆணையர் டேனியல் தெரிவித்தார். நியூயார்க் அடுக்குமாடி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *