நியூசிலாந்துடன் முதல் டெஸ்ட்: வங்கதேசம் உறுதியான ஆட்டம்

நியூசிலாந்துடன் முதல் டெஸ்ட்: வங்கதேசம் உறுதியான ஆட்டம்

மவுன்ட் மவுங்காநுயி: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்துள்ளது. பே ஓவல் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீசியது. முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்திருந்த நியூசிலாந்து, நேற்று 328 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது. யங் 52, கான்வே 122, டெய்லர் 31, நிகோல்ஸ் 75 ரன் எடுத்தனர். வங்கதேச பந்துவீச்சில் மிராஸ், ஷோரிபுல் தலா 3, மோமினுல் 2, எபாதத் உசேன் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்துள்ளது. ஷத்மன் இஸ்லாம் 22, நஜ்முல் உசேன் ஷான்டோ 64 ரன் (109 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். மகமதுல் ஹசன் ஜாய் 70 ரன், கேப்டன் மோமினுல் ஹக் 8 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.

AIARA

🔊 Listen to this மவுன்ட் மவுங்காநுயி: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்துள்ளது. பே ஓவல் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீசியது. முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்திருந்த நியூசிலாந்து, நேற்று 328 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது. யங் 52, கான்வே 122, டெய்லர் 31, நிகோல்ஸ் 75 ரன்…

Leave a Reply

Your email address will not be published.