நிதி நெருக்கடியைத் தீர்க்க ஆன்லைனில் பூஜை; போலி சாமியாரிடம் பணத்தை இழந்த பெண் தற்கொலை!

மும்பை கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் சுபாங்கி (45). இவர் தன் வயதான பெற்றோருடன் வசித்துவந்தார். கடந்த சில ஆண்டுகளாக இவரின் வீட்டில் பணப் பிரச்னை இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், சுபாங்கி பல இடங்களில் கடன் வாங்கிவிட்டு, மீள முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு, டி.வி விளம்பரம் ஒன்றில் சாமியார் ஒருவர் குடும்பப் பிரச்னைகளுக்கு ஆன்லைனில் பூஜை செய்து தீர்வளிப்பதாகத் தெரிவிக்கிறார். அதைப் பார்த்த சுபாங்கி, அந்தச் சாமியாருக்கு போன் செய்து தன் பிரச்னைகளைத் தெரிவித்திருக்கிறார். சாமியாரும் பிரச்னைகளைத் தீர்க்க ஆன்லைனில் யாகம் நடத்துவதாகத் தெரிவிக்க, சுபாங்கி அதற்காகக் கடந்த நான்கு ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக ரூ.37 லட்சம் அளவுக்கு அவரிடம் அளித்திருக்கிறார். அப்படியிருந்தும் சுபாங்கிக்கு வேலையும் கிடைக்கவில்லை, நிதி நெருக்கடியும் தீரவில்லை.

மன உளைச்சல்

அதையடுத்து, சாமியாரை நேரில் சந்தித்து, தன் பிரச்னைகளைக் கூறலாம் என்று நினைத்து அவரைப் பார்ப்பதற்காக அயோத்திக்குச் சுபாங்கி புறப்பட்டுச் சென்றிருக்கிறார். அயோத்தியில் சாமியார் கொடுத்த முகவரிக்குச் சென்று பார்த்தபோது, அப்படி ஒரு சாமியாரே இல்லை என்று தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை சுபாங்கி உணர்ந்தார். அதையடுத்து, உடனடியாக மும்பைக்குச் சென்று போலீஸில் புகார் செய்தார். அவரின் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

தற்கொலை

இந்த நிலையில், சாமியாரிடம் ஏமார்ந்து போனதை நினைத்து மிகுந்த மன உளைச்சலிலிருந்து வந்த சுபாங்கி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீஸார், அவரின் செல்போன் தரவுகளைவைத்து போலி சாமியாரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

Also Read: மும்பை: `மேட்ரிமோனி மூலம் பழக்கம்; போலி கடற்படை அதிகாரியிடம் பணத்தைத் தொலைத்த பெண்!’

🔊 Listen to this மும்பை கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் சுபாங்கி (45). இவர் தன் வயதான பெற்றோருடன் வசித்துவந்தார். கடந்த சில ஆண்டுகளாக இவரின் வீட்டில் பணப் பிரச்னை இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், சுபாங்கி பல இடங்களில் கடன் வாங்கிவிட்டு, மீள முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு, டி.வி விளம்பரம் ஒன்றில் சாமியார் ஒருவர் குடும்பப் பிரச்னைகளுக்கு ஆன்லைனில் பூஜை செய்து தீர்வளிப்பதாகத் தெரிவிக்கிறார். அதைப் பார்த்த சுபாங்கி, அந்தச்…