நாமக்கல்: சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசப்பட்ட பெண்! – தீவிர விசாரணையில் போலீஸார்

நாமக்கல் நகரில் உள்ள ரோஜா நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான கிணறு சாலையோரம் உள்ளது. இந்த கிணற்றில் அழுகிய நிலையில் பெண் ஒருவர் பிணமாக மிதப்பதாகவும், அவரின் உடலின் ஒரு பகுதி சாக்குமூட்டையில் கட்டி இருப்பதாகவும் அங்குள்ள மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனால், இந்த தகவலை நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கும் கொடுத்துள்ளனர். இதையடுத்து, நாமக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேஸ்வரன் தலைமையில் விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், கிணற்றில் மிதந்த அந்த பெண்ணின் உடலை மீட்டு, நாமக்கல் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையிலான போலீஸார் அங்கு வந்தனர்.

நாமக்கல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

அதோடு, அந்த பெண்ணின் உடலை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். பின்னர், அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், கிணற்றில் பிணமாக மிதந்த பெண் யார் என்ற விவரம் போலீஸாருக்கு கிடைக்கவில்லை. அங்குள்ள மக்களுக்கும் தெரியவில்லை. இதனால், அந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து நாமக்கல் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண்ணை கொலை செய்து சாக்கு மூட்டையில் உடலை கட்டி கிணற்றில் வீசி சென்று இருக்கலாம் என்று வழக்கு பதிந்து போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் மிதந்த சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

🔊 Listen to this நாமக்கல் நகரில் உள்ள ரோஜா நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான கிணறு சாலையோரம் உள்ளது. இந்த கிணற்றில் அழுகிய நிலையில் பெண் ஒருவர் பிணமாக மிதப்பதாகவும், அவரின் உடலின் ஒரு பகுதி சாக்குமூட்டையில் கட்டி இருப்பதாகவும் அங்குள்ள மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனால், இந்த தகவலை நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கும் கொடுத்துள்ளனர். இதையடுத்து, நாமக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர்…