நாமக்கல்: காதல் திருமணம்; திருமணம் மீறிய உறவு?! – மனைவியைப் படுகொலை செய்த கணவர்

காதலித்துத் திருமணம் செய்துகொண்ட மனைவி, சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் இளைஞரோடு திருமணம் மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் கோபமடைந்த அந்தப் பெண்ணின் கணவர், அந்தப் பெண்ணைக் கொடுவாளால் வெட்டிக் கொலைசெய்திருக்கும் சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கொலை

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் பகுதியிலுள்ள நவனி பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். 25 வயதான இந்த இளைஞர், பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது சக மாணவியான இந்திரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரைக் காதலித்து, திருமணம் செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் காதல் தம்பதியருக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. திருமணத்துக்குப் பின்னர் இருவரும் நவனியில் வசித்துவந்துள்ளனர். தமிழ்ச்செல்வன், மரம் வெட்டும் கூலி வேலைக்குச் சென்று வந்திருக்கிறார். அவரின் மனைவி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டின் அருகிலுள்ள மெடிக்கல், சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்துவந்திருக்கிறார்.

Also Read: `201 பள்ளிகள்…26,085 மாணவிகள்!’ – பாலியல் தொல்லை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய அமைச்சர்

அப்போது, கடையின் உரிமையாளருக்கும், இந்திராவுக்கும் இடையே திருமணம் மீறிய உறவு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதைத் தெரிந்துகொண்ட தமிழ்ச்செல்வன், இந்திராவைக் கண்டித்திருக்கிறார். வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருக்குமாறு கண்டித்துச் சொல்லியிருக்கிறார். ஆனால், தமிழ்ச்செல்வன் கண்டித்த பின்னரும், அவருக்குத் தெரியாமல் இந்திரா, திருமணம் தாண்டிய உறவைத் தொடர்ந்துவந்ததாகச் சொல்லப்படுகிறது.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

இவர்களின் உறவு தொடர்வதைத் தெரிந்தகொண்ட தமிழ்ச்செல்வன், மனைவியிடம் இது குறித்துக் கேட்டு, சண்டைபோட்டிருக்கிறார். அப்போது, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் அதிகமானபோது ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன், கோபத்தில் தனது மனைவியைக் கொடுவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றதாக சொல்கிறார்கள்.

இந்த நிலையில், இந்தக் கொலைச் சம்பவம் குறித்து அறிந்த புதுச்சத்திரம் காவல் நிலைய போலீஸார், ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு, தலைமறைவாகிவிட்ட தமிழ்ச்செல்வனைப் பிடிக்க தனிப்படை அமைத்து, போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

🔊 Listen to this காதலித்துத் திருமணம் செய்துகொண்ட மனைவி, சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் இளைஞரோடு திருமணம் மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் கோபமடைந்த அந்தப் பெண்ணின் கணவர், அந்தப் பெண்ணைக் கொடுவாளால் வெட்டிக் கொலைசெய்திருக்கும் சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கொலை நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் பகுதியிலுள்ள நவனி பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். 25 வயதான இந்த இளைஞர், பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது சக மாணவியான இந்திரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரைக் காதலித்து, திருமணம் செய்துகொண்டதாகச்…