நாமக்கல்: எதிர்ப்பை மீறி காதலனுடன் சென்ற மகள்? – விரக்தியில் விபரீத முடிவெடுத்த தாய்!

  • 63

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள வீரப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் குமார். இவர், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம் நெய்காரம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் தன் குடும்பத்துடன் அங்கேயே தங்கி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பார்வதி. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன். இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக கல்குவாரியில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், கல்குவாரிக்கு வரும் டிரைவர் ஒருவருடன் பார்வதியின் மகளுக்கு பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அது, நாளடைவில் காதலாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த குமார் மற்றும் பார்வதி ஆகியோர் தங்கள் மகளிடம், “அந்த டிரைவர் சரியானவர் இல்ல. அவரை மறந்துவிடு. படிக்கிற வழிய பாரு. காலம் வரும்போது உனக்கு நல்ல வாழ்க்கையைத் தேடி தருகிறோம்” என்று அறிவுரை கூறினார்களாம். இருந்தாலும், பெற்றோரின் பேச்சை கேட்காமல், அவர்கள் மகள் அந்த டிரைவரோடு காதலை தொடர்ந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்து போன பார்வதி, அதுகுறித்த நினைப்பிலேயே இருந்திருக்கிறார். இந்த நிலையில், அவர்களின் மகள் திடீரென வீட்டிலிருந்து மாயமானார். உடனே பார்வதியும், அவர் கணவரும் அவரைப் பல இடங்களில் தேடியிருக்கிறார்கள்.

நாமக்கல்

ஆனால், அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பார்வதியின் மகள் டிரைவருடன் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், மனமுடைந்த பார்வதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். இதையடுத்து, அவர் கல்குவாரியில் உள்ள 50 அடி ஆழ குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதை அறியாமல் மகளைத் தேடிச் சென்ற பார்வதி திரும்ப வரவில்லை என நினைத்து உறவினர் வீடுகளில் குமார் அவரைத் தேடி அலைந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று காலை குவாரிக்கு அக்கம்பக்கத்தினர் குளிக்கச் சென்றனர். அப்போது, ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதை கண்டு அவர்கள் குமாருக்கு தகவல் கொடுத்தனர். குமார் அங்கு வந்து பார்த்தபோது பிணமாக மிதப்பது தன் மனைவிதான் என்றும், மகள் காதலனுடன் சென்றதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.

தற்கொலை

இதுகுறித்து, குமார் எலச்சிபாளையம் காவல்நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், எலச்சிப்பாளையம் காவல்நிலைய போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வதியின் உடலை மீட்டு, உடற்கூறாய்வு செய்வதற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மகள் காதலனோடு சென்றதால், மனமுடைந்த பெண் ஒருவர் கல்குவாரி குட்டையில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியடை வைத்திருக்கிறது.

Also Read: நாமக்கல்: விவசாய தோட்டத்தில் அழுகிய நிலையில் பெண் சடலம்! – போலீஸார் தீவிர விசாரணை

AIARA

🔊 Listen to this சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள வீரப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் குமார். இவர், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம் நெய்காரம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் தன் குடும்பத்துடன் அங்கேயே தங்கி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பார்வதி. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன். இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக கல்குவாரியில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், கல்குவாரிக்கு வரும் டிரைவர் ஒருவருடன் பார்வதியின்…

AIARA

🔊 Listen to this சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள வீரப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் குமார். இவர், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம் நெய்காரம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் தன் குடும்பத்துடன் அங்கேயே தங்கி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பார்வதி. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன். இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக கல்குவாரியில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், கல்குவாரிக்கு வரும் டிரைவர் ஒருவருடன் பார்வதியின்…

Leave a Reply

Your email address will not be published.