“நான் இரண்டு இந்தியாவிலிருந்து வருகிறேன்!” – சர்சையைக் கிளப்பிய நடிகர் வீர் தாஸ் பேச்சு

`நான் இரண்டு விதமான இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன்!’ என்று, பாலிவுட் நகைச்சுவை நடிகர் வீர் தாஸ் அமெரிக்காவில் பேசியிருப்பது இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. “இந்தியாவை அவமானப்படுத்திவிட்டார்” எனக்கூறி டெல்லி பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், “இது மென்மையான தீவிரவாதம், இப்படிபேசும் கிரிமினல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கூறியிருக்கிறார். எதிர்ப்புகள் ஒருபுறமிருந்தாலும், `இதுதான் இன்றைய இந்தியாவின் நிதர்சன நிலை!’ என சக பாலிவுட் நடிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வீர்தாஸை ஆதரித்தும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஜான் எஃப் கென்னடி மையத்தில் வீர் தாஸ்

கடந்த சில நாள்களுக்கு முன்பாக, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரிலிருக்கும், புகழ்பெற்ற `ஜான் எஃப் கென்னடி மையத்தில்’ (John F Kennedy Center) நடந்த நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகரும், நகைச்சுவை பேச்சாளருமான வீர் தாஸ் கலந்துகொண்டார். அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில் தனது உரையாற்றிய வீர் தாஸ், `நான் இரண்டு இந்தியாவிலிருந்து வருகிறேன்’ (I come from two Indias) என்ற தலைப்பில் பேசியிருந்தார். அவர் நிகழ்த்திய உரையின் ஆறு நிமிடக் காணொளியைத் தனது யூ-டியூப் சேனலில் கடந்த நவம்பர் 15-ம் தேதி வெளியிட்டார். அதன்பின்னர்தான் பிரச்னை பூதாகரமாக வெடித்தது. குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க உள்ளிட்ட வலதுசாரியினரை வீர் தாஸின் பேச்சு கொதிப்படைய செய்திருக்கிறது.

அப்படி கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையில், வீர் தாஸ் என்ன தான் பேசினார்? விரிவாக பார்ப்போம்.

நான் (இரண்டுவிதமான முரண்பாடுகளைக் கொண்ட) இந்தியாவிலிருந்து வருகிறேன்!

இந்தியாவில் பெண்களின் நிலை

1. பெண்களின் நிலை:-

“பெண்களை பகல் நேரங்களில் தெய்வமாக வழிபட்டுவிட்டு, இரவு நேரங்களில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யும் இந்தியாவில் இருந்து நான் வருகிறேன்”.

லக்கிம்பூர் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம்

2. விவசாயிகளின் நிலை:-

“சைவ உணவு உண்பதை பெருமிதமாகக் கூறிக்கொண்டு, அதேசமயம் அதற்கான காய்கறிகளை விளைவிக்கும் விவசாயிகள் மீது ஏறிமிதித்துச் செல்லும் இந்தியாவிலிருந்து நான் வருகிறேன்”.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததற்கு, முகமது ஷமி மீது அவதூறு பரப்பப்பட்டது

3. கிரிக்கெட்டின் நிலை:-

“பச்சை (ஜெர்ஸி-பாகிஸ்தான்) அணியுடன் விளையாடும்போது, ஒவ்வொரு முறையும் நீலம் (ஜெர்ஸி-இந்தியா) வெற்றியடைய வேண்டும் என்ற ஆசைப்படுகிறோம். ஆனால், பச்சையிடம் தோற்றுவிட்டால் திடீரென நீலம், காவியாக மாறிவிடும் இந்தியாவிலிருந்து வருகிறேன்”.

4. பெட்ரோல் விலையின் நிலை:-

“இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், யூதர்கள் என அனைவரும் இருக்கும் இந்தியாவிலிருந்து வருகிறேன். இப்போது, நாங்கள் அனைவரும் வானத்தை நிமிர்ந்து பார்க்கும்போது, ஒரே விஷயத்தை மட்டுமே பார்க்கிறோம். அது வேறொன்றுமில்லை பெட்ரோல் விலைதான்.”

விண்ணைமுட்டும் பெட்ரோல் விலை உயர்வு

5. பாலுணர்வின் நிலை:-

“ஒருவரின் பாலுணர்வு சார்ந்த விருப்பங்களை கேலி செய்துகொண்டும், அதேசமயம் மக்கள்தொகையில் 1 பில்லியனை தாண்டியும் சென்றுகொண்டிருக்கும் இந்தியாவிலிருந்து வருகிறேன்.”

பால் புதுமையினர் கம்யூனிட்டி

6. மக்களின் மனநிலை:-

“டிரைவர் வேலையாக இருந்தாலும், வீட்டு வேலையாக இருந்தாலும்கூட, அந்த வேலையை அமெரிக்காவில் சென்றுதான் பார்க்கவேண்டும் என விரும்பும் மனம் கொண்ட இந்தியாவிலிருந்து நான் வருகிறேன்.”

7. மதவேறுபாட்டின் நிலை:-

“ஒவ்வொருநாளும் பாகிஸ்தானுக்கு போ (Go to Pakistan) என்று விரட்டியபடியும், அதேசமயம் ஒவ்வொருநாளும் பாகிஸ்தானியர்களின் ஓவர்களை வரவேற்றும் கொண்டிருக்கும் இந்தியாவிலிருந்து நான் வருகிறேன்.”

இந்தியா- பாகிஸ்தான்

8. வெளிப்படைத்தன்மையின் நிலை:-

“பிரதமரின் நலன் சம்பந்தப்பட்ட தகவல்களில் அக்கறை கொள்ளும் மக்களுக்கு, பி.எம். கேர்ஸ் நிதி (PM Cares Fund) குறித்து எந்த தகவலும் கிடைக்கப்பெறாத இந்தியாவிலிருந்து நான் வருகிறேன்.”

பி.எம் கேர்ஸ்

9. அரசாங்கத்தின் நிலை:-

“ஆங்கிலேய ஆட்சியை விரட்டியடித்த பிறகும், இங்கிருக்கும் அரசாங்கத்தை ஆளும் கட்சி என்று அழைக்கும் இந்தியாவிலிருந்து நான் வருகிறேன்.”

Also Read: மேற்கு வங்கம்: `பிஎம் கேர்ஸ் நிதி எங்கே?’ – மோடிக்கு எதிராக மம்தா தொடுக்கும் அஸ்திரம்!

10. தலைமையின் நிலை:

“30 வயதுக்கும் குறைவான உழைக்கும் இளைஞர்களை அதிகம் கொண்ட ஒரு நாட்டில், 75 வயதுடைய ஒரு தலைவரின், 150 ஆண்டுகள் பழைமைத்துவமான சித்தாந்தங்களை கேட்டுக்கொண்டிருக்கும் இந்தியாவிலிருந்து நான் வருகிறேன்.”

மோடி

என நடிகர் வீர் தாஸ், அந்த வீடியோவில் பேசியிருந்தார். அதுமட்டுமில்லாமல், தலைவர்கள் மாஸ்க் அணியாமல் சந்தித்துக்கொள்வது முதல் கோவின் இணையதளம், பெண்களின் ஆடை சுதந்திரம், ஆணாதிக்க கலாசாரம் என அத்தனை நடைமுறைகளையும் விமர்சித்திருந்தார்.

வீர் தாஸ்

வீர் தாஸின் இந்த சர்ச்சை உரை, சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. வீர் தாஸின் பேச்சுக்கு நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் கருத்துகளும், விமர்சனங்களும் வந்தவண்ணமாக இருக்கின்றன.

வீர் தாஸின் ட்விட்டர் பதிவு

சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்ததை அடுத்து, தற்போது நடிகர் வீர் தாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது நாட்டை இழிவுபடுத்துவது என்னுடைய நோக்கமல்ல. இந்தியாவிலிருக்கும் இருவேறுபட்ட நிலையைத்தான் நகைச்சுவையாக கூறியிருக்கிறேன். எல்லா நாட்டிலும் நல்லது-கெட்டது, வெளிச்சம்-இருள் என இரண்டுமே இருக்கும். இதில் எந்த ரகசியமும் இல்லை. தயவுசெய்து வெட்டி ஒட்டப்பட்ட போலி காணொலிகளைப் பார்த்து யாரும் ஏமாற வேண்டாம். நான் இந்தியாவை மதிக்கிறேன். அன்பை பரப்புவோம்” என விளக்கமளித்திருக்கிறார்.

🔊 Listen to this `நான் இரண்டு விதமான இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன்!’ என்று, பாலிவுட் நகைச்சுவை நடிகர் வீர் தாஸ் அமெரிக்காவில் பேசியிருப்பது இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. “இந்தியாவை அவமானப்படுத்திவிட்டார்” எனக்கூறி டெல்லி பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், “இது மென்மையான தீவிரவாதம், இப்படிபேசும் கிரிமினல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கூறியிருக்கிறார். எதிர்ப்புகள் ஒருபுறமிருந்தாலும், `இதுதான் இன்றைய இந்தியாவின் நிதர்சன நிலை!’ என சக பாலிவுட்…

🔊 Listen to this `நான் இரண்டு விதமான இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன்!’ என்று, பாலிவுட் நகைச்சுவை நடிகர் வீர் தாஸ் அமெரிக்காவில் பேசியிருப்பது இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. “இந்தியாவை அவமானப்படுத்திவிட்டார்” எனக்கூறி டெல்லி பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், “இது மென்மையான தீவிரவாதம், இப்படிபேசும் கிரிமினல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கூறியிருக்கிறார். எதிர்ப்புகள் ஒருபுறமிருந்தாலும், `இதுதான் இன்றைய இந்தியாவின் நிதர்சன நிலை!’ என சக பாலிவுட்…