நாகாலாந்து துப்பாக்கிச்சூடு – பிரதமர் மோடி ஆலோசனை

நாகாலாந்தில் சுரங்க தொழிலாளர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

நாடாளுமன்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு நாகாலாந்து விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்துள்ள நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் உள்ள மோன் மாவட்டத்தில் தீவிரவாதிகள் என நினைத்து சுரங்கத் தொழிலாளர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் தொழிலாளர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

image

இதனால், ஆத்திரமடைந்த மக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர்கள் தரப்பிலும் உயிரிழப்பும், காயங்களும் ஏற்பட்டுள்ளன. தூப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறையில் 19 பேர் உயிரிழந்துள்ளனனர். தொடர்ந்து நாகாலாந்தில் பதற்றம் நீடித்து வருவதால், அங்கு தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனைப்படிக்க…தஞ்சையில் பச்சிளம் குழந்தை கொல்லப்பட்ட விவகாரம் – தாய் கைது 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

🔊 Listen to this நாகாலாந்தில் சுரங்க தொழிலாளர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நாடாளுமன்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு நாகாலாந்து விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்துள்ள நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் உள்ள மோன் மாவட்டத்தில் தீவிரவாதிகள் என நினைத்து…