நடிகர் ஷாருக் கான் இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; மத்திய பிரதேச நபரைக் கைது செய்த போலீஸ்!

  • 5

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், குர்லா ரயில் நிலையம், நடிகர் ஷாருக் கானின் மன்னத் இல்லம் மற்றும் கார்கர் குருத்வாரா அருகில் நியூக்ளியர் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று மர்ம நபர் போலீஸாருக்கு போன் செய்து மிரட்டியிருந்தார். போனில் பேசிய நபர் தான் ஒரு ராணுவ வீரர் என்றும் தெரிவித்திருந்தார். இதையடுத்து போனில் மர்ம நபர் தெரிவித்த இடங்களில் போலீஸார் மோப்ப நாய்களுடன் சென்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மர்ம நபர் தெரிவித்த தகவல் வதந்தி என்று தெரியவந்தது.

ஷாருக் கான்

இதையடுத்து தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என்று மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்த நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வந்தனர். போன் செய்த நபர் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரியவந்தது.

கைது

அதையடுத்து, அந்த மாநிலத்தின் ஜபல்பூர் போலீஸாருக்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டது. ஜபல்பூர் போலீஸார் விரைந்து செயல்பட்டு ஜிதேஷ் தாக்குர் என்பவரைக் கைதுசெய்தனர். அவரிடம் விசாரித்த போது அவர் வேலையில்லாமல் குடிப்பழக்கத்துடன் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து ஜபல்பூர் கூடுதல் எஸ்.பி.கோபால் கூறுகையில், “கைது செய்யப்பட்ட நபர் இதற்கு முன்பு பல முறை காவல்துறை எண்ணுக்கு போன் செய்து கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்” என்று தெரிவித்தார். அவரை மும்பைக்கு அழைத்து வந்து விசாரிக்க மும்பை போலீஸார் முடிவு செய்துள்ளனர். ஜபல்பூர் போலீஸாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Also Read: பாலிவுட் பிரபலங்கள் கைது, தொடர் சர்ச்சை; ஷாருக் கான் மகனைக் கைதுசெய்த அதிகாரி சமீர் பதவி பறிப்பு!

AIARA

🔊 Listen to this கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், குர்லா ரயில் நிலையம், நடிகர் ஷாருக் கானின் மன்னத் இல்லம் மற்றும் கார்கர் குருத்வாரா அருகில் நியூக்ளியர் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று மர்ம நபர் போலீஸாருக்கு போன் செய்து மிரட்டியிருந்தார். போனில் பேசிய நபர் தான் ஒரு ராணுவ வீரர் என்றும் தெரிவித்திருந்தார். இதையடுத்து போனில் மர்ம நபர் தெரிவித்த இடங்களில் போலீஸார் மோப்ப நாய்களுடன்…

Leave a Reply

Your email address will not be published.