நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொன்றுவிட்டு தப்பிய கணவன் சிக்கினார்

புழல்: புழல் லட்சுமி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தமிழரசன் (34). இவரது மனைவி சபரிதா (29). தமிழரசன் மீது மீஞ்சூர், காட்டூர் காவல் நிலையத்தில் கொலை, அடிதடி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக இவர் தனது மனைவியுடன் புழல் பகுதியில் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், சபரிதா புதிய மொபட் வாங்கியுள்ளார். இந்த மொபட் மூலம் அடிக்கடி வெளியில் சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த தமிழரசன் இதுபற்றி மனைவியிடம் கேட்டுள்ளார். அதற்கு சபரிதா மழுப்பலாக பதில் கூறியுள்ளார். இதை ஏற்காத தமிழரசன், அடிக்கடி வெளியில் செல்லக்கூடாது என கண்டித்துள்ளார். ஆனால், அதை மீறி சபரிதா வெளியில் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தமிழரசன், கடந்த 2 நாட்களுக்கு முன் மனைவி சபரிதாவின் கழுத்தை நெரித்து, படுகொலை செய்துவிட்டு தலைமறைவானார். புகாரின்பேரில்  புழல் போலீசார், வழக்குப்பதிவு செய்து, தமிழரசனை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு புழல், காவாங்கரை ஏரி பகுதியில் குடிபோதையில் திரிந்த தமிழரசனை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த புதிய மொபட்டை பறிமுதல் செய்தனர். விசாரணையில், தனக்கு தெரியாமல் மனைவி புது மொபட், ஏசி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கியதால் சந்தேகத்தில் மனைவியை கொலை செய்தது தெரியவந்தது.

AIARA

🔊 Listen to this புழல்: புழல் லட்சுமி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தமிழரசன் (34). இவரது மனைவி சபரிதா (29). தமிழரசன் மீது மீஞ்சூர், காட்டூர் காவல் நிலையத்தில் கொலை, அடிதடி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக இவர் தனது மனைவியுடன் புழல் பகுதியில் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், சபரிதா புதிய மொபட் வாங்கியுள்ளார். இந்த மொபட் மூலம் அடிக்கடி வெளியில் சென்று…