நகர்புற உள்ளாட்சித் தேர்தல் விருப்பமனு கொடுத்தவர்களிடம் திமுக நேர்காணல்

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் விருப்பமனு கொடுத்தவர்களிடம் திமுக நேர்காணல்

காஞ்சிபுரம்: தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் கடந்த அக்டோபர் மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட ஐந்து ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் அடுத்த கட்டமாக விரைவில் மாநகராட்சி , நகராட்சி, பேரூராட்சி என நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுக , அதிமுக , காங்கிரஸ் , பாஜக என அனைத்தும்  கட்சி சார்பிலும் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் இருந்து கடந்த மாதம் விருப்ப வேட்புமனு பெறப்பட்டது.இந்நிலையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் பவளவிழா மாளிகையில் நேற்று காஞ்சிபுரம் மாநகராட்சி , உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் பேரூராட்சிக்கு போட்டியிட விருப்ப மனு அளித்த நபர்களிடம் நேற்று தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் தலைமையில் காஞ்சிபுரம் எம்பி. செல்வம், மாநில மாணவரணி செயலாளரும் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன்,   மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம். சேகர், நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம்   உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் கெ. ஞானசேகர் வாலாஜாபாத் ஒன்றிய  பி.சேகர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் வார்டு வாரியாக  நேர்காணல் நடத்தினார்கள். மதுராந்தகம்: நகர்ப்புற ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ நேற்று மதுராந்தகத்தில் நேர்காணல் நடத்தினார். தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சி, அச்சிறுப்பாக்கம், கருங்குழி, இடைக்கழிநாடு ஆகிய பேரூராட்சி போட்டியிட 130க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் விருப்ப மானு அளித்திருந்தனர். இவர்களுக்கான, நேர்காணல் நிகழ்ச்சி மதுராந்தகம் நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ நேர்காணலில் கலந்துகொண்டார். அப்போது, அவர் விருப்பமனு அளித்தவர்களிடம் கல்வித்தகுதி, கட்சிப்பணி, சமுதாய பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், மாவட்ட பொருளாளர் கோகுலக்கண்ணன், மதுராந்தகம் நகர செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர்கள் சத்தியசாய், சாலவாக்கம் குமார், ஒன்றிய அமைப்பாளர் பொன்.சிவகுமார், அச்சிறுப்பாக்கம் பேரூர் செயலாளர் உசேன், கருங்குழி பேரூர் செயலாளர் விஜய கணபதி, இடைக்கழிநாடு பேரூர் செயலாளர் இனியரசு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல்மாலிக், எழிலரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, லத்தூர் ஒன்றியம் வடபட்டினம் ஊராட்சி அமமுக கட்சி கிளை செயலாளர் பிரபு, மாணவரணி துணை செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட 50 பேர் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

🔊 Listen to this காஞ்சிபுரம்: தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் கடந்த அக்டோபர் மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட ஐந்து ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் அடுத்த கட்டமாக விரைவில் மாநகராட்சி , நகராட்சி, பேரூராட்சி என நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுக , அதிமுக , காங்கிரஸ் , பாஜக என அனைத்தும்  கட்சி சார்பிலும்…

🔊 Listen to this காஞ்சிபுரம்: தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் கடந்த அக்டோபர் மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட ஐந்து ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் அடுத்த கட்டமாக விரைவில் மாநகராட்சி , நகராட்சி, பேரூராட்சி என நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுக , அதிமுக , காங்கிரஸ் , பாஜக என அனைத்தும்  கட்சி சார்பிலும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *