தேமுதிகவின் முதல் செயல்தலைவர் யார்? விஜயகாந்த் தெரிவிப்பார் என பிரேமலதா பேச்சுDinakaran.com |27 Dec 2021on December 26, 2021 at 7:19 am

தேமுதிகவின் முதல் செயல்தலைவர் யார்? விஜயகாந்த் தெரிவிப்பார் என பிரேமலதா பேச்சுDinakaran.com |27 Dec 2021on December 26, 2021 at 7:19 am

சென்னை: பொதுக்குழு கூட்டி செயல்பதலைவர் பதவி குறித்து விஜயகாந்த் அறிவிப்பார் என  பிரேமலதா விஜயகாந்த் கூறினார். தென்சென்னை தெற்கு மாவட்ட தேமுதிக சார்பாக கிறிஸ்துமஸ் விழா பரங்கிமலையில் உள்ள பேட்ரிக் தேவாலயம் எதிரே  நேற்று நடந்தது. மாவட்டச் செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். பட்ரோடு புனித பேட்ரிக் தேவாலயத்தில் நடந்த விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் கலந்து கொன்டு 500 பேருக்கு கிறிஸ்துமஸ் கேக் மற்றும் பிரியாணி வழங்கினர். தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ‘‘ பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்திய முடிவு வரவேற்கத்தக்கது. இதன் மூலம் பெண்கள் கல்லூரி படிப்பை முடித்து உடல், மனரீதியாக பாதுகாப்புடன் எதிர்காலத்தை திட்டமிட முடியும். ஆனால் கிராமப்புறங்களில் 18 வயதில் திருமணம் செய்ய வேண்டும் என்று நிறையபேர் நினைக்கின்றனர். மக்கள் கருத்தை கேட்க வேண்டும். மக்கள் வரவேற்றால் திட்டத்தை அமல்படுத்துவதில் தவறு இல்லை. ஒரு கட்சியின் தலைவராக இருந்து சீமான் செய்த செயலை மக்கள் வரவேற்கவில்லை. அதற்கு பிரதிபலனாக மேடை ஏறி தாக்குகின்றனர். உரிமைகளை நாங்களும் கேட்போம் என்கின்றனர். இது எல்லாம் அரசியலில்  தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளத்தான். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவது உறுதி. போட்டியிட கட்சியினர் தயாராகின்றனர். தேர்தல் தேதி அறிவித்ததும் யார் போட்டியிடுவர்கள் என்பது அறிவிக்கப்படும். அண்மையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் கட்சியில் செயல்  தலைவர் பொறுப்பை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தினர். ஒட்டு மொத்த நிர்வாகிகளின் கருத்தை ஏற்று செயற் குழு, பொதுக்குழு கூட்டிய பின் செயல் தலைவர் பொறுப்பு குறித்து விஜயகாந்த் அறிவிப்பார். அதேபோல் விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாக வந்த செய்தியை பார்த்து நானே வியந்தேன். இது தவறானசெய்தி. விஜயகாந்த், தற்போது  கட்சிப்பணிகளை பார்ப்பதுடன் உடற்பயிற்சியை மேற்கொண்டு ஓய்வாக இருக்கிறார். அவர் நடிப்பதாக  வந்த தகவல் தவறானது. இவ்வாறு அவர் கூறினார்.

🔊 Listen to this சென்னை: பொதுக்குழு கூட்டி செயல்பதலைவர் பதவி குறித்து விஜயகாந்த் அறிவிப்பார் என  பிரேமலதா விஜயகாந்த் கூறினார். தென்சென்னை தெற்கு மாவட்ட தேமுதிக சார்பாக கிறிஸ்துமஸ் விழா பரங்கிமலையில் உள்ள பேட்ரிக் தேவாலயம் எதிரே  நேற்று நடந்தது. மாவட்டச் செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். பட்ரோடு புனித பேட்ரிக் தேவாலயத்தில் நடந்த விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் கலந்து கொன்டு 500 பேருக்கு கிறிஸ்துமஸ் கேக்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *