தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி; விரட்டிவிரட்டி கடித்து குதறிய நாய்கள்! -ம.பி.யில் பயங்கரம்

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வீட்டிற்கு வெளியில் தெருவில் 4 வயது சிறுமி விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது, அப்பகுதியில் நின்ற நாய்கள் சிறுமியை பார்த்து திடீரென குரைக்க ஆரம்பித்தது. உடனே சிறுமி பயத்தில் தெருவில் ஓட ஆரம்பித்தாள். அனைத்து நாய்களும் சிறுமியை விரட்ட ஆரம்பித்தன. இதனால் ஓடிக்கொண்டிருந்த சிறுமி பயத்தில் கீழே விழுந்தாள். உடனே தெருநாய்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து சிறுமியை கடித்து குதற ஆரம்பித்தன. அந்த வழியாக வந்த ஒருவர் இதனை கவனித்து உடனே நாய்களை அந்த இடத்தில் இருந்து விரட்டினார். இதனால் சிறுமிகள் காயங்களுடன் உயிர் தப்பினாள். தற்போது தலை, கை, கால்களில் காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாள்.

சிறுமியை துரத்தும் நாய்கள்

போபாலில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள் பொதுமக்களில் சிலர்.. கடந்த ஆண்டு 7 வயது சிறுமி தனது தாயாருடன் நடந்து சென்ற போது நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்து குதறின. இதில் சிறுமி படுகாயம் அடைந்தாள். 2019-ம் ஆண்டு 6 வயது சிறுவன் தனது தாயாருடன் நடந்து சென்ற போது 6 தெருநாய்கள் ஒன்று சேர்ந்து சிறுவனை கடித்து குதற ஆரம்பித்தன. நாய்களை விரட்ட முயன்ற சிறுவனின் தாயாரையும் நாய்கள் விட்டு வைக்கவில்லை. இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதில் சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனான். போபாலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நாய்கள் தெருவில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால் அவற்றிற்கு எதிராக திடமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

AIARA

🔊 Listen to this மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வீட்டிற்கு வெளியில் தெருவில் 4 வயது சிறுமி விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது, அப்பகுதியில் நின்ற நாய்கள் சிறுமியை பார்த்து திடீரென குரைக்க ஆரம்பித்தது. உடனே சிறுமி பயத்தில் தெருவில் ஓட ஆரம்பித்தாள். அனைத்து நாய்களும் சிறுமியை விரட்ட ஆரம்பித்தன. இதனால் ஓடிக்கொண்டிருந்த சிறுமி பயத்தில் கீழே விழுந்தாள். உடனே தெருநாய்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து சிறுமியை கடித்து குதற ஆரம்பித்தன. அந்த வழியாக வந்த ஒருவர் இதனை…

Leave a Reply

Your email address will not be published.