தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 119 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 119 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 119 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1:0 என இந்தியா முன்னிலை பெற்றது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. செஞ்சுரியன் சூப்பர் ஸ்போர்ட் பார்க் ஸ்டேடியத்தில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 327 ரன்கள் குவித்தது. அதன்பின் ஆடிய தென் ஆப்ரிக்கா 197 ரன்களில் சுருண்டதால் 130 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை இந்தியா துவக்கியது.எனினும் முதல் இன்னிங்ஸ் போல் இந்திய வீரர்களால் ரன்கள் குவிக்க முடியவில்லை. ஆடுகள தன்மை மாற்றம், தென் ஆப்ரிக்க பவுலர்களின் ஸ்விங், பவுன்சர் மிரட்டலால் இந்தியா 2வது இன்னிங்சில் 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து 305 ரன் வெற்றி இலக்குடன் 2வது இன்னிங்சை துவங்கிய தென் ஆப்ரிக்கா 4ம் ஆட்ட நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு 211 ரன்கள் தேவை என்ற நிலையில் நேற்று பரபரப்பான கடைசி நாள் ஆட்டம் துவங்கியது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் எல்கர் 77 ரன்களில் பும்ரா பந்து வீச்சில் எல்பிடபிள்யு முறையில் அவுட் ஆனார். அடுத்து வந்த டி காக் 21, முல்டர் 1, ஜான்சன் 13 ரன்களில் நடையை கட்டினர். பின்னர் வந்த ரபாடா, நிகிடி ஆகியோர் டக் அவுட் ஆக இறுதியில் 191 ரன்களுக்கு அந்த அணி ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் பும்ரா, ஷமி தலா 3 விக்கெட்டுகள், சிராஜ், அஸ்வின் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.இதன்மூலம் இந்தியா 119 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை அபாரமாக வென்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது. முதல் இன்னிங்சில் சதம் அடித்து அசத்திய ராகுல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தென் ஆப்ரிக்காவில் இதுவரை நடந்த 7 டெஸ்ட் தொடர்களில் ஒருமுறை கூட இந்தியா ெதாடரை வென்றதில்லை. இந்த வெற்றியின் மூலம் இம்முறை தொடரை வெல்லும் வாய்ப்புகள் இந்தியாவுக்கு பிரகாசமாகியுள்ளது. இது தென் ஆப்ரிக்கா அணியை கடும் நெருக்கடிக்குள்ளாக்கி உள்ளது. இதனால் அடுத்து வரும் 2 போட்டிகளிலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். *200க்கு குறைவு; 3வது தோல்வி தென் ஆப்ரிக்கா தனது சொந்த மண்ணில் 2 இன்னிங்சிலும் 200 ரன்களுக்கு குறைவான ரன்கள் எடுத்து தோற்பது இது 3வது முறையாகும். இதற்கு முன்பு ஜோகன்னஸ்பர்க்கில் 2001-02ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல், 2வது இன்னிங்சில் 159, 133 ரன்களும், அதே ஜோகனஸ்பர்க்கில் 2017-18ல் இந்தியாவுக்கு எதிராக முதல், 2வது இன்னிங்சில் 194, 177 ரன்களும் எடுத்து தோற்றது. தற்போது மீண்டும் இந்தியாவுக்கு எதிராக 200க்கும் குறைவான ரன்கள் எடுத்து 3வது தோல்வியை சந்தித்துள்ளது.*இந்தியாவுக்கு 4வது வெற்றி இந்தியா இதற்கு முன் தென் ஆப்ரிக்காவை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் 2006-07ல் ஜோகனஸ்பர்க்கில் 123 ரன்கள், 2010-11ல் டர்பனில் 87 ரன்கள், 2017-18ல் ஜோகனஸ்பர்க்கில் 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இது 4வது வெற்றியாகும்.

🔊 Listen to this செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 119 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1:0 என இந்தியா முன்னிலை பெற்றது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. செஞ்சுரியன் சூப்பர் ஸ்போர்ட் பார்க் ஸ்டேடியத்தில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்…

🔊 Listen to this செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 119 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1:0 என இந்தியா முன்னிலை பெற்றது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. செஞ்சுரியன் சூப்பர் ஸ்போர்ட் பார்க் ஸ்டேடியத்தில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *