தூத்துக்குடி: பைக்கில் கடத்தி வரப்பட்ட ரூ.6.5 கோடி மதிப்புள்ள அம்பர்கிரிஸ்; பறிமுதல் செய்த போலீஸார்

  • 21

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலிருக்கும் உடன்குடி வில்லிகுடியிருப்பு பகுதியில் குலசேகரன்பட்டினம் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த செய்துங்கநல்லூரைச் சேர்ந்த முருகேஷ் என்பவர், போலீஸாரைப் பார்த்ததும் பைக்கின் வேகத்தைக் குறைக்காமல் உடனே திரும்பிச் சென்றார். இதையடுத்து அவரைப் பின் தொடர்ந்து சென்ற போலீஸார், மடக்கிப் பிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் கூறிய முன்னுக்குப் பின்னான தகவலால் அவரிடம் இருந்த பையை சோதனையிட்டபோது அதில் அம்பர்கிரிஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட முருகேஷ்

இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து 6.5 கிலோ எடைகொண்ட, ரூ.6.5 கோடி மதிப்புள்ள அம்பர்கிரிஸை பறிமுதல் செய்தனர். இந்த அம்பர்கிரிஸ் எப்படி கிடைத்தது? யாருக்கு விற்பனை செய்யப்பட இருந்தது? இதன் கடத்தல் பின்னணியில் யார் உள்ளனர் என போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட அம்பர்கிரிஸை போலீஸார், திருச்செந்தூர் வனச்சரகர் ரவீந்திரனிடம் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடியை மையமாக வைத்துதான் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்கள் நடந்துவந்தன. ஆனால், கடந்த சில மாதங்களாக தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளான வேம்பார், தருவைக்குளம், திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், மணப்பாடு, பெரியதாழை ஆகிய பகுதிகளில் கடத்தல்கள் அதிகரித்திருக்கின்றன. அம்பர்கிரிஸ் குறித்து மீன்வள ஆராய்ச்சியாளர்கள் சிலரிடம் பேசினோம், “ ‘ஸ்பெர்ம்’ என்ற எண்ணெய்த் திமிங்கலத்தின் ‘உமிழ்நீர்’ அல்லது ‘வாந்தி’ எனப்படும் ஒருவிதக் கழிவுப்பொருள்தான் ’அம்பர்கிரிஸ்’. இந்த ஸ்பெர்ம் திமிங்கலத்தின் செரிமான உறுப்பிலிருந்து உருவாகுவதாகச் சொல்லப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட அம்பர்கிரிஸ்

திமிங்கலம் தன் இரையை வேட்டையாடும்போது இந்த வகையான மெழுகு போன்ற திரவத்தைப் பயன்படுத்துகிறது. கணவாய், ஆக்டோபஸ் போன்ற மீன்களை இரையாக விழுங்கும்போது அவற்றின் கூர்மையான உறுப்புகள், முட்கள் போன்றவை திமிங்கலத்தின் செரிமான உறுப்புகளில் காயத்தை ஏற்படுத்தும். அதைத்தடுப்பதற்காக, திமிங்கலம் ’அம்பர்கிரிஸ்’-ஐத் தற்காப்பு கவசமாகப் பயன்படுத்துகிறது. தேவையற்ற கழிவுகளை வாந்தி எடுப்பதன் மூலம் வெளியேற்றுகின்றன. அந்தக் கழிவுகள், அம்பர்கிரிஸாக கடலில் மிதக்கின்றன.

இவை, சூரியஒளி பட்டு கட்டியாகவும், கடல் நீரால் கறுப்பு, வெள்ளை, சாம்பல் நிறங்களாகவும் மாறுகின்றன. கடல் அலைகளால் அடித்து வரப்பாட்டு கடற்கரை ஓரத்திலும், சில நேரங்களில் மீனவர்களின் மீன்பிடி வலைகளிலும் சிக்குகின்றன” என்றனர். அம்பர்கிரிஸுக்கு ஏன் இந்த மதிப்பு என அதிகாரிகள் சிலரிடம் பேசினோம், “இந்தியாவின் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் விதிகளின்கீழ் எண்ணெய் திமிங்கலங்கள், பாதுகாக்கபட்ட விலங்குகளின் தகுதியைப் பெற்றிருக்கின்றனர். இந்த ’அம்பர்கிரிஸ்’-ஐ உயர்ரக வாசனை திரவியங்கள் தயாரிப்பதற்காகவும், விலை உயர்ந்த மதுபானங்களின் வாசனைக்காகவும் பயன்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. சில மருந்துகள் தயாரிப்பில்கூட பயன்படுத்தப்படுகிறதாம்.

பறிமுதல் செய்யப்பட்ட அம்பர்கிரிஸ்

வாசனை திரவியங்களை அதிகம் பயன்படுத்தும் அரபு நாடுகளில் அம்பர்கிரிஸுக்கு தனி வரவேற்பும் உள்ளதாம். ஒரு கிலோ எடையுள்ள அம்பர்கிரிஸின் சர்வதேச மதிப்பு ரூ.1 கோடி முதல் ஒன்றரை கோடியாம். தங்கத்தைவிட இதன் மதிப்பு பல மடங்காகப் பார்க்கப்படுகிறது. அதனால்தான் இதை ’கடல் தங்கம்’, ‘மிதக்கும் தங்கம்’ என்கிறார்கள். தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களில் இவை சட்டவிரோதமாகக் கடத்தப்படுகின்றன. இருப்பினும், இந்தக் கடத்தலை முடிந்தவரை தடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம்” என்றனர்.

Also Read: திமிங்கலம் உமிழும் அம்பர்கிரிஸ் – தடை செய்யப்பட்ட அரிய பொருளை விற்க முயன்ற 5 பேர் கைது!

🔊 Listen to this தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலிருக்கும் உடன்குடி வில்லிகுடியிருப்பு பகுதியில் குலசேகரன்பட்டினம் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த செய்துங்கநல்லூரைச் சேர்ந்த முருகேஷ் என்பவர், போலீஸாரைப் பார்த்ததும் பைக்கின் வேகத்தைக் குறைக்காமல் உடனே திரும்பிச் சென்றார். இதையடுத்து அவரைப் பின் தொடர்ந்து சென்ற போலீஸார், மடக்கிப் பிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் கூறிய முன்னுக்குப் பின்னான தகவலால் அவரிடம் இருந்த பையை சோதனையிட்டபோது அதில் அம்பர்கிரிஸ் இருந்தது…

🔊 Listen to this தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலிருக்கும் உடன்குடி வில்லிகுடியிருப்பு பகுதியில் குலசேகரன்பட்டினம் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த செய்துங்கநல்லூரைச் சேர்ந்த முருகேஷ் என்பவர், போலீஸாரைப் பார்த்ததும் பைக்கின் வேகத்தைக் குறைக்காமல் உடனே திரும்பிச் சென்றார். இதையடுத்து அவரைப் பின் தொடர்ந்து சென்ற போலீஸார், மடக்கிப் பிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் கூறிய முன்னுக்குப் பின்னான தகவலால் அவரிடம் இருந்த பையை சோதனையிட்டபோது அதில் அம்பர்கிரிஸ் இருந்தது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *