துளித்துளியாய்…

துளித்துளியாய்…

  • 7

* டிசம்பர் மாதத்துக்கான ஐசிசி சிறந்த வீரர் விருது பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் தொடக்க வீரர் மயாங்க் அகர்வால், நியூசி சுழல் அஜாஸ் படேல், ஆஸி. வேகம் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.* தொடர் தோல்வியை சந்தித்து வரும் ஜோ ரூட்டுக்கு பதிலாக, இங்கிலாந்து அணியின் புதிய கேப்டனாக ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்சை நியமிக்க வேண்டும் என்று ஆஸி. அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் வலியுறுத்தி உள்ளார்.* ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் ஏடிகே மோகன் பகான் – ஒடிஷா எப்சி அணிகளிடையே நேற்று நடக்க இருந்த லீக் ஆட்டம், ஏடிகே வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்.* புரோ கபடி லீக் தொடரில் தபாங் டெல்லி கேசி அணி 37-33 என்ற புள்ளிக் கணக்கில் உ.பி.யோதா அணியை நேற்று வீழ்த்தியது.* எம்.எஸ்.தோனி தனது சிஎஸ்கே சீருடையை பரிசளித்ததற்கு நன்றி தெரிவிப்பதாக பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹரிஸ் ராவுப் ட்வீட் செய்துள்ளார்.* மெல்போர் சம்மர் செட்-1 டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடாலுடன் அமெரிக்காவின் தகுதிநிலை வீரர் மேக்சிம் கிரெஸ்ஸி மோத உள்ளார்.* நம்பர் 1 டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் ஆஸ்திரேலியா விசா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த பிரச்னையில் ஜோகோவிச்சுக்கு அனைத்து வகையிலும் உதவத் தயாராக உள்ளதாக செர்பியா பிரதமர் அனா பர்னபிச் உறுதி அளித்துள்ளார்.

🔊 Listen to this * டிசம்பர் மாதத்துக்கான ஐசிசி சிறந்த வீரர் விருது பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் தொடக்க வீரர் மயாங்க் அகர்வால், நியூசி சுழல் அஜாஸ் படேல், ஆஸி. வேகம் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.* தொடர் தோல்வியை சந்தித்து வரும் ஜோ ரூட்டுக்கு பதிலாக, இங்கிலாந்து அணியின் புதிய கேப்டனாக ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்சை நியமிக்க வேண்டும் என்று ஆஸி. அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் வலியுறுத்தி உள்ளார்.*…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *