துருப்பிடித்த துப்பாக்கி, 7 தோட்டாக்கள்! – கோவை விமான நிலையத்தைப் பதறவைத்த கேரள காங்கிரஸ் நிர்வாகி

  • 25

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி பகுதியைச் சேர்ந்தவர் கே.எஸ்.பி.ஏ தங்கல் (60). இவர் பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவராக இருக்கிறார். பெங்களூரு செல்வதற்காக இன்று காலை கோவை விமான நிலையம் வந்திருக்கிறார்.

தங்கல்

Also Read: கேரளா: “என் சாவுக்கு யாரும் காரணமில்லை!” – தற்கொலை செய்துகொண்ட ஆளுநரின் கார் டிரைவர்

மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அவர் உடைமைகளை சோதனையிட்டதில், துருப்பிடித்த பழைய துப்பாக்கி ஒன்றும், ஏழு தோட்டாக்களும் கண்டறியப்பட்டன.

மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவரிடம் துப்பாக்கி அனுமதி தொடர்பாக எந்த ஆவணமும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பீளமேடு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அங்கு அவரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

துப்பாக்கி, தோட்டாக்கள்

முதற்கட்ட தகவலின்படி, தங்கல், பெங்களூரு மார்க்கமாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செல்ல முயன்றது தெரியவந்துள்ளது. வரும் அவசரத்தில் துப்பாக்கி எடுத்து வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

தங்கல், பழைய துப்பாக்கியுடன் பிடிபட்ட தகவல் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே கோவை பாஜக-வினர் பீளமேடு காவல் நிலையம் முன்பு குவிந்தனர். “இது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.

பாஜக
போலீஸ் வாக்குவாதம்

எனவே, தங்கல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாஜக-வினர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

AIARA

🔊 Listen to this கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி பகுதியைச் சேர்ந்தவர் கே.எஸ்.பி.ஏ தங்கல் (60). இவர் பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவராக இருக்கிறார். பெங்களூரு செல்வதற்காக இன்று காலை கோவை விமான நிலையம் வந்திருக்கிறார். தங்கல் Also Read: கேரளா: “என் சாவுக்கு யாரும் காரணமில்லை!” – தற்கொலை செய்துகொண்ட ஆளுநரின் கார் டிரைவர் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அவர் உடைமைகளை சோதனையிட்டதில், துருப்பிடித்த பழைய துப்பாக்கி ஒன்றும்,…

Leave a Reply

Your email address will not be published.