`துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் இனி பயன்படுத்தப்படமாட்டாது!’ – முடித்து வைக்கப்பட்ட வழக்கு

  • 5

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த கவிவர்மன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்திலிருந்து வெளியேறிய துப்பாக்கிக் குண்டு, கடந்த டிசம்பர் 30-ம் தேதி வீட்டிலிருந்த 11 வயது சிறுவன் மீது, பாய்ந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்தச் சிறுவன், நான்கு நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துப்பாக்கிச் சுடும் தளத்திலிருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவிலிருந்த சிறுவன் மீது தவறுதலாக இந்தக் குண்டு பாய்ந்து அவன் உயிரிழந்துள்ளான். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு ஒன்றை அமைத்து, துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும், சிறுவனின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும்.

சக்தி வாய்ந்த துப்பாக்கிக் குண்டுகளைப் பயன்படுத்திய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை நிரந்தரமாக மூடவும் உத்தரவிட வேண்டும்”எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கானது, ஜனவரி 25-ம் தேதி நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, ஸ்ரீமதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், “கடந்த டிசம்பர் 30-ம் தேதியே நார்த்தாமலை துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளம் மூடப்பட்டது. இனிவரும் காலங்களிலும் அந்தத் தளம் பயன்படுத்தப்பட மாட்டாது” என உறுதி அளிக்கப்பட்டது.

எனவே, இவற்றைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் எக்காரணம் கொண்டும் இனி பயன்படுத்தப்படமாட்டாது என்று கூறி வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

AIARA

🔊 Listen to this புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த கவிவர்மன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்திலிருந்து வெளியேறிய துப்பாக்கிக் குண்டு, கடந்த டிசம்பர் 30-ம் தேதி வீட்டிலிருந்த 11 வயது சிறுவன் மீது, பாய்ந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்தச் சிறுவன், நான்கு நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துப்பாக்கிச் சுடும்…

Leave a Reply

Your email address will not be published.