திருவனந்தபுரம்: ஆக்கர் கடையில் தீ விபத்து; தீயை அணைக்க 12 வாகனங்களில் சென்ற 100 வீரர்கள்!

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை அடுத்த கிள்ளிப்பாலம் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவனந்தபுரம் கிள்ளிப்பாலம் பகுதியிலிருந்து ஆற்றுக்கால் செல்லும் சாலையின் இரு பக்கங்களிலும் ஆக்கர் கடைகளும், குடோன்களும் அமைந்திருக்கின்றன. அந்த ஆக்கர் கடைகளை ஒட்டி நெருக்கமாகக் குடியிருப்புகளும் இருக்கின்றன. இந்த நிலையில், ஒரு குடோனில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஆக்கர் கடையிலுள்ள பிளாஸ்டிக், எலெக்ட்ரானிக் பொருள்கள் குவித்துப்போடப்பட்டிருந்த பகுதியில் தீ பற்றி எரிந்ததால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க சிரமப்பட்டனர். மேலும், அந்தப் பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றும் இருக்கிறது.

தீ விபத்து

தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், அமைச்சர் சிவன் குட்டி சம்பவ இடத்துக்குச் சென்று தீயணைக்கும் பணியை முடுக்கிவிட்டார். 12 தீயணைப்பு வாகனங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடியிருப்புகளில் வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அருகில் கிள்ளி ஆறு இருந்ததால் தீயை அணைக்க தண்ணீர் எடுக்க வாய்ப்பாக அமைந்தது.

தீ விபத்து குறித்து ஆக்கர் கடை உரிமையாளர் சுல்பிக்கர் கூறும்போது, “கடைக்கு அருகிலேயே இரண்டு மின்கம்பங்கள் நிற்கின்றன. அவற்றில் ஒரு மின்கம்பத்திலுருந்து தீப்பொறி விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் மின்வாரிய ஊழியர்களும் அந்தப் பகுதியில் நின்றிருந்தனர். நாங்கள் விரைவில் தீயை அணைக்க முயன்றோம். ஆனால் கையைமீறிப் போய்விட்டது” என்றார்.

தீயணைக்கும் பணி

ஆனால் அந்தப் பகுதிவாசிகளோ, “நான்கு மாதங்களாக இங்கிருக்கும் ஆக்கர் பொருள்கள் மாற்றப்படாமல் இருந்தன. பொருள்களை மாற்றுங்கள் எனப் பலமுறை கேட்டுக்கொண்டும் கடை உரிமையாளர் கண்டுகொள்ளவில்லை” என குற்றம்சாட்டினர். “ஆக்கர் குடோன் முறையான அனுமதி பெற்று இயங்குகிறதா என்பது பற்றி ஆய்வு செய்வோம்’’ என திருவனந்தபுரம் மாநகராட்சி அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

🔊 Listen to this கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை அடுத்த கிள்ளிப்பாலம் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவனந்தபுரம் கிள்ளிப்பாலம் பகுதியிலிருந்து ஆற்றுக்கால் செல்லும் சாலையின் இரு பக்கங்களிலும் ஆக்கர் கடைகளும், குடோன்களும் அமைந்திருக்கின்றன. அந்த ஆக்கர் கடைகளை ஒட்டி நெருக்கமாகக் குடியிருப்புகளும் இருக்கின்றன. இந்த நிலையில், ஒரு குடோனில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஆக்கர் கடையிலுள்ள பிளாஸ்டிக், எலெக்ட்ரானிக் பொருள்கள் குவித்துப்போடப்பட்டிருந்த பகுதியில் தீ பற்றி எரிந்ததால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *