தமிழ்நாட்டின் பாரம்பரிய நிறமான மஞ்சள் நிறத்தை வைத்து காவியை ஒழிப்போம்: தயாநிதி மாறன் எம்பி பேச்சு

தமிழ்நாட்டின் பாரம்பரிய நிறமான மஞ்சள் நிறத்தை வைத்து காவியை ஒழிப்போம்: தயாநிதி மாறன் எம்பி பேச்சு

சென்னை: தமிழ்நாட்டின் பாரம்பரிய நிறமான மஞ்சள் நிறத்தை வைத்து காவியை ஒழிப்போம் என்று  தயாநிதி மாறன் எம்பி கூறினார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, சென்னை தேனாம்பேட்டை தாமஸ் சாலையில் உள்ள ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆயிரம்விளக்கு பகுதி செயலாளர் மா.பா.அன்புதுரை தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பங்கேற்று பொதுமக்களுக்கு பாய், குடம் மற்றும் மஞ்சள் நிறப் பையில் ஆடைகளை வைத்து சுமார் ஆயிரம் பேருக்கு வழங்கினார்.தொடர்ந்து தயாநிதி மாறன் கூறியதாவது: மக்கள் பணியே மகேசன் பணி என்று திமுக தலைவர் சொல்வதைப் போல், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காகவே மஞ்சள்நிற பைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனது மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் நலத்திட்ட உதவி  நிகழ்ச்சிகளில், பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கு, மஞ்சள் பை பயன்படுத்தப்பட்டது. மஞ்சள் நிறத்தை தேர்ந்தெடுப்பதற்கான காரணம், தமிழ்நாட்டின் பாரம்பரிய நிறமே மஞ்சளாக இருப்பதுதான். எனவே மஞ்சள் நிறத்தை வைத்து காவியை ஒழிப்போம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

🔊 Listen to this சென்னை: தமிழ்நாட்டின் பாரம்பரிய நிறமான மஞ்சள் நிறத்தை வைத்து காவியை ஒழிப்போம் என்று  தயாநிதி மாறன் எம்பி கூறினார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, சென்னை தேனாம்பேட்டை தாமஸ் சாலையில் உள்ள ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆயிரம்விளக்கு பகுதி செயலாளர் மா.பா.அன்புதுரை தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பங்கேற்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *