தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு… புதிதாக 10.17 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்!!

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு… புதிதாக 10.17 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்!!

  • 5

சென்னை: தமிழகத்தில் புதிதாக 10.17 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்கம், திருத்தம் செய்ய கடந்த நவம்பர் மாதம் முழுவதும் 14.27 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதையடுத்து இன்று 2022ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு வெளியிட்டார். அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் புதிய வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். *இறுதி வாக்காளர் பட்டியலின் படி, “ வாக்காளர் பட்டியலில் புதிதாக 10.17 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமான பெயர்கள் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளது.*தமிழகத்தில் 6 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3,12,26,750 பேர் ஆண்கள். 3,23,91,256 பேர் பெண்கள். 18 -19 வயதுள்ள 4,32,600 பேர் புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.*மூன்றாம் பாலினத்தில் 7, 804 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை உள்ளது.*தமிழகத்திலேயே செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூரில் (7,11,755) அதிக வாக்காளர்களும், நாகை மாவட்டம் கீழ்வேளூரில் (1,78,517) குறைவான வாக்காளர்களும் உள்ளனர். புதுச்சேரியில் 10.10 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.*புதியதாக வெளிநாடு வாழ் வாக்காளர்கள் 8 பேரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். * இதுவரை 4.88 லட்சம் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். *வாக்காளர் பட்டியலை www.election.tn.gov.in என்ற இணைய பக்கத்தில் காணலாம்” என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

AIARA

🔊 Listen to this சென்னை: தமிழகத்தில் புதிதாக 10.17 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்கம், திருத்தம் செய்ய கடந்த நவம்பர் மாதம் முழுவதும் 14.27 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதையடுத்து இன்று 2022ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு வெளியிட்டார். அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் புதிய வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். *இறுதி வாக்காளர்…

Leave a Reply

Your email address will not be published.