தந்தத்தால் குத்தி தாக்கிய யானை; வளர்த்த பாகன் பலி! – டாப்ஸ்லிப்பில் நடந்தது என்ன?!

  • 6

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட கோழிக்கமுத்தி கிராமத்தில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. வனத்துறை பராமரிப்பில் உள்ள இந்த முகாமில் 27 யானைகள் உள்ளன.

அசோக் யானை

Also Read: யானை சாணத்தில் மாஸ்க், பிளாஸ்டிக் குவியல்கள்; வனத்தில் ஆய்வு செய்தபோது அதிர்ச்சி!

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து, அசோக் என்ற ஆண் யானை கோழிக்கமுத்திக்கு கொண்டு வரப்பட்டது. சுமார் 12 வயதான அந்த யானைக்கு, ஆறுமுகம் (45) என்பவர் பாகனாக பணியாற்றி வந்தார்.

நேற்று வழக்கம் போல அசோக் யானைக்கு உணவு கொடுத்துவிட்டு, மேய்ச்சலுக்காக காட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக யானை, ஆறுமுகத்தை தாக்கியது. காயமடைந்த ஆறுமுகத்தை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆறுமுகம்

ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முதல்கட்டமாக வனத்துறை சார்பில், ஆறுமுகம் குடும்பத்துக்கு ரூ.25,000 நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கோழிக்கமுத்தி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் விசாரித்தபோது, “அசோக் யானையும், ஆறுமுகமும் நல்ல உறவுல தான் இருந்தாங்க. வண்டலூர் உயிரியல் பூங்கால, அசோக் யானை குழந்தையா இருந்தப்ப பால் கொடுத்து வளத்தது ஆறுமுகம்தான். சொந்த குழந்தைய மாதிரிதான் அசோக்கை பார்த்துக்கிட்டாரு.

ஆறுமுகம் அசோக்

சனிக்கிழமை டாப்ஸிலிப்ல யானை பொங்கல் விழா எல்லாம் முடிச்சுட்டு, எல்லாருமே ரொம்ப சந்தோஷமா தான் இருந்தோம். அசோக் யானைக்கு ஆறுமுகம் மட்டும்தான் பாகனா இருந்தார். அசிஸ்டென்ட் யாரும் இல்ல.

அதனால முருகன்னு ஒருத்தர அசிஸ்டென்டா சேர்ந்தாரு. அவருக்கு யானைக் கிட்ட டிரெய்னிங் கொடுத்துட்டு இருந்துருக்காங்க. புது ஆளுங்கறதால யானைக்கு பிடிக்கல. அந்த கோபத்துல முருகனை தாக்க போயிருக்கு. முருகனை காப்பத்த போனப்ப, ஆறுமுகத்தை தந்தத்தால குத்தி தாக்கிருச்சு.

ஆறுமுகம் அசோக்

ஆறுமுகத்துக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. என்ன சொல்றது.. மனுசங்களே ஒரு நேரம் மாதிரி, ஒரு நேரம் இருக்கறது கிடையாது. எங்க பொழப்பு இப்படிதான்.” என்றனர் வேதனையுடன்.

AIARA

🔊 Listen to this கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட கோழிக்கமுத்தி கிராமத்தில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. வனத்துறை பராமரிப்பில் உள்ள இந்த முகாமில் 27 யானைகள் உள்ளன. அசோக் யானை Also Read: யானை சாணத்தில் மாஸ்க், பிளாஸ்டிக் குவியல்கள்; வனத்தில் ஆய்வு செய்தபோது அதிர்ச்சி! கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து, அசோக் என்ற ஆண் யானை கோழிக்கமுத்திக்கு கொண்டு வரப்பட்டது. சுமார் 12…

Leave a Reply

Your email address will not be published.