தடை செய்யப்பட்ட ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 600 கிலோ குட்கா பறிமுதல்: இருவர் கைது

ராசிபுரத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 10 லட்சம் மதிப்புள்ள 600 கிலோ குட்கா மற்றும் லாரி பறிமுதல். இருவரை ராசிபுரம் காவல் துறையினர் கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் குட்கா தடை செய்யப்பட்ட நிலையில், காவல் துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு பறிமுதல் மற்றும் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது இதையடுத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

image

இந்நிலையில் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே விற்பனைக்காக லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ. 10 லட்சம் மதிப்பிலான சுமார் 600 கிலோ குட்கா மற்றும் லாரியை பறிமுதல் செய்து பெங்களூரைச் சேர்ந்த மணிகாந்தா மற்றும் செந்தில் உள்ளிட்ட 2 பேரை ராசிபுரம் காவல் துறையினர் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

🔊 Listen to this ராசிபுரத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 10 லட்சம் மதிப்புள்ள 600 கிலோ குட்கா மற்றும் லாரி பறிமுதல். இருவரை ராசிபுரம் காவல் துறையினர் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் குட்கா தடை செய்யப்பட்ட நிலையில், காவல் துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு பறிமுதல் மற்றும் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது இதையடுத்து…