தஞ்சை: மீன் தொட்டியில் சடலமாக கிடந்த 6 மாத பெண் குழந்தை; வெளியான அதிர்ச்சி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மீன்தொட்டியில் 6 மாத பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட நிலையில், குழந்தை மரணத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மல்லிப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் நசருதீன் – சாஹிலா தம்பதியர். இவர்களுக்கு 6 மாத பெண்குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் அதிகாலை எழுந்து பார்த்தபோது குழந்தை காணாமல் போயிருக்கிறது. இந்நிலையில் நசாருதீனின் சித்தப்பா குடும்பமும் அவர்கள் வீட்டில் தங்கியிருந்த நிலையில் குழந்தையை அவர்களும் சேர்ந்து தேடியிருக்கின்றனர். பின்னர் வீட்டிற்கு பின்புறத்தில் வைக்கப்பட்டிருந்த மீன் தொட்டியில் குழந்தை மூழ்கி இறந்து கிடப்பதாக சாஹிலாவிடம் கூறியிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் குடும்பத்திற்குள் பேச்சுவார்த்தை நடத்தி குழந்தையை இஸ்லாம் முறைப்படி அடக்கம் செய்திருக்கின்றனர்.

image

இதுகுறித்து அந்த கிராமத்து வருவாய்துறையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், சாஹிலாவின் தந்தையும் குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். மேலும், குழந்தை இறந்த அன்று மாலை சாஹிலா திடீரென்று கத்தியிருக்கிறார். இதனைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் வருவாய்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று வட்டாட்சியர் மற்றும் டிஎஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் குழந்தையின் பிரேதம் தோண்டி எடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

image

மேலும், நசாருதீனின் உறவினர் ஒருவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததையடுத்து இவர்கள் புதுக்கோட்டையிலுள்ள ஒரு மந்திரவாதியை அணுயபோது அவர் 27 கோழிகளை பலியிடக் கூறியிருக்கிறார். பலி செலுத்தியபிறகும் அவர் உடல்நலம் பெறாததால் மீண்டும் மந்திரவாதியின் தூண்டுதலால் குழந்தையை பலி கொடுத்திருக்கலாம் என்றும் அக்கம் பக்கத்தினர் கூறியிருக்கின்றனர். இதனால் நசாருதீன் உட்பட அவரது உறவினர்களை போலீசார் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

🔊 Listen to this தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மீன்தொட்டியில் 6 மாத பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட நிலையில், குழந்தை மரணத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மல்லிப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் நசருதீன் – சாஹிலா தம்பதியர். இவர்களுக்கு 6 மாத பெண்குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் அதிகாலை எழுந்து பார்த்தபோது குழந்தை காணாமல் போயிருக்கிறது. இந்நிலையில் நசாருதீனின் சித்தப்பா குடும்பமும் அவர்கள் வீட்டில் தங்கியிருந்த…