தஞ்சை: இரண்டு சிறுவர்களை காப்பாற்றிய மூதாட்டி; சான்றிதழ் வழங்கி பாராட்டிய மாவட்ட ஆட்சியர்!

  • 4

இந்தியா முழுவதும் இன்று 73-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசிய கொடியினை ஏற்றி பல்வேறு சாதனைகள் புரிந்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இதில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களை காப்பாற்றிய 60 வயது மூதாட்டிக்கு வீர தீர செயலுக்கான சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இதே போல, தொடர்ந்து சமூக செயல்களில் ஈடுபட்டு அடிதட்டு மக்களின் வளர்ச்சிக்கு பல்வேறு உதவிகளை செய்து வரக்கூடிய சமூக ஆர்வலரான பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஆதி.ராஜராம் என்பவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தன் உடலை தானாமாக கொடுத்திருக்கிறார். அவரின் சேவையை பாராட்டி மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

வீர தீர செயலுக்கான பாராட்டு பெறும் சரோஜா

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள அலவந்திபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சரோஜா (60). இவர் கணவர் சந்தானம். சரோஜா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளை தினமும் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம். வழக்கம் போல் கடந்த 13-ம் தேதி கபிஸ்தலம் அருகே உள்ள கங்காதரபுரம் காவிரி ஆற்றுக்கு அருகே ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

அப்போது, சுமார் 4 மணியளவில் 13 வயது மதிக்கத்தக்க மூன்று சிறுவர்கள் குளிக்கச் சென்று ஆற்றுக்குள் இறங்கியுள்ளனர். ஆழத்தை அறியாத சிறுவர்கள் ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். இதில் ஒரு சிறுவன் ஆற்று நீருக்குள் மூழ்க அவனை காப்பாற்ற மற்ற இரண்டு பேரும் ஒவ்வொருவராக சென்றுள்ளனர். ஆழம் அதிகமாக இருந்ததால் அந்த சிறுவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அதையடுத்து, அய்யோ காப்பாத்துங்க… என கத்தி கதறியுள்ளனர். சிறுவர்களின் சத்தம் கேட்டு ஓடிவந்த சரோஜா தத்தளித்து கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்து பதற்றமடைந்தார். பின்னர் சற்றும் யோசிக்காமல் தனது சேலையை அவிழ்த்து சிறுவர்கள் இருந்த இடத்தில் வீசினார். சேலையைப் பிடித்து கொள்ள இரண்டு சிறுவர்கள் மெல்லமாக கரைக்கு வந்து சேர்ந்தனர்.

அதற்குள் மற்றொரு சிறுவன் முழுவதுமாக மூழ்கி மாயாமாகி விட்டான். பின்னர் அவன் சடலமாக மீட்கப்பட்டான். 60 வயதில் இரண்டு சிறுவர்களை காப்பாற்றிய சரோஜாவின் செயல் பெரும் பாராட்டைப் பெற்றது. இதனையறிந்த திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அப்போதே சரோஜாவை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி வாழ்த்தினார்.

இது தொடர்பாக சரோஜாவிடம் பேசினோம். “ஆடு மேய்த்து கொண்டிருந்த நான் சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டதுமே ஆடுகளை அப்படியே விட்டுட்டு ஓடினேன். மூன்று சிறுவர்கள் தத்தளிச்சிட்டுஇருந்தாங்க. எனக்கு என்ன செய்றதுனே தெரியலை. டக்குனு என் சேலையை அவிழ்த்து ஒரு முனையை நான் பிடித்து கொண்டு மற்றொரு முனையை ஆற்றுக்குள் வீசினேன். அதை பிடிச்சுக்க சொல்லி இரண்டு பேரை ஒரு வழியாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்து காப்பாத்தினேன்.

குடியரசு தின விழா கலெக்டரிடம் பாராட்டு சன்றிதழ் பெறும் ஆதி.ராஜாராம்.

மற்றொரு சிறுவன் ஆழமான பகுதிக்குள் சென்று மூழ்கிட்டான். அந்த ஒத்த உசுரையும் காப்பாத்தியிருந்தா என் மனசு முழுக்க நெறஞ்சு இருக்கும். ஆனா, என்னால முடியாம போச்சு, அவன் மூச்சும் அடங்கி போச்சு. கலெக்டர் சார், சிறுவர்களை காப்பாற்றியதற்காக என்னை அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டியிருக்கிறார். மனிதாபிமானத்தோடு செஞ்ச இந்த சேவையை பலரும் பாராட்டுறது சந்தோஷமா இருக்கு” என்றார்.

Also Read: தண்ணீரில் மூழ்கிய இளைஞர்கள்! சேலையை வீசிக் காப்பாற்றிய வீரத் தமிழச்சிகள்!

AIARA

🔊 Listen to this இந்தியா முழுவதும் இன்று 73-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசிய கொடியினை ஏற்றி பல்வேறு சாதனைகள் புரிந்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இதில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களை காப்பாற்றிய 60 வயது மூதாட்டிக்கு வீர தீர செயலுக்கான சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதே போல, தொடர்ந்து சமூக…

AIARA

🔊 Listen to this இந்தியா முழுவதும் இன்று 73-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசிய கொடியினை ஏற்றி பல்வேறு சாதனைகள் புரிந்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இதில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களை காப்பாற்றிய 60 வயது மூதாட்டிக்கு வீர தீர செயலுக்கான சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதே போல, தொடர்ந்து சமூக…

Leave a Reply

Your email address will not be published.