தங்கம் கடத்தும் மையமாகிறதா சென்னை விமான நிலையம்?! – நிர்மலா சீதாராமன் கருத்தும், புள்ளிவிவரங்களும்!

சமீபத்தில் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து முடிந்தது. இந்தக் கூட்டத்தொடரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், இந்திய விமான நிலையங்களில் பிடிபட்ட கடத்தல் தங்கம் குறித்துக் கேள்வி எழுப்பினார். அதற்கு, எழுத்துபூர்வமான பதிலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார்.

நிர்மலா சீதாராமன்

இந்தியாவைப் பொறுத்தவரை சென்னை, கோழிக்கோடு, கொச்சின், திருச்சி போன்ற விமான நிலையங்களில் அதிக அளவிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர், “இந்த 2020-2021 நடப்பு நிதியாண்டில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் 130 கிலோ தங்கமும், கோழிக்கோடு விமான நிலையத்தில் 128 கிலோ தங்கமும், டெல்லி, திருச்சி விமான நிலையத்தில் தலா 78 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

கொரோனா பேரிடர், கொரோனா தொற்றுக் கட்டுப்பாடுகள் காரணமாக 2020-2021 நிதியாண்டில் தங்கம் கடத்தப்பட்டிருப்பது பெருமளவு குறைந்திருக்கிறது. கடந்த 2019-2020 நிதியாண்டைப் பொறுத்தவரை, மிகப்பெரிய விமான நிலையங்களான டெல்லி, மும்பையில்தான் அதிக அளவில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. அந்த நிதியாண்டில் டெல்லியில் மட்டும் 484 கிலோ தங்கமும், மும்பையில் 403 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

சென்னை விமான நிலையம்

அதே நிதியாண்டில், சென்னையைப் பொறுத்தவரை 151 கிலோ தங்கமும், கோழிக்கோடு விமான நிலையத்தில் 147 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி, கடந்த ஐந்து ஆண்டுகளில், 2018-19 நிதியாண்டில் மும்பை விமான நிலையத்தில் மட்டும் 763 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019-2020 நிதியாண்டில் மட்டும் நாடு முழுவதும் கடல், விமானம், தரைவழி என அனைத்து மார்க்கங்களிலும் 185 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது” என்றார்.

Also Read: விமான நிலைய கடத்தல் தங்கம் எங்கு இருக்கும்? என்னவாகும்? #DoubtOfCommonMan

கடந்த சில நிதியாண்டுகளின் தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது 2018-2019-ம் நிதியாண்டில் வேறு எந்த விமான நிலையத்திலும் இல்லாத அளவுக்கு மும்பை விமான நிலையத்தில் 763 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதே விமான நிலையத்தில் கடந்த 2019-2020 நிதியாண்டிலும், 403 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. அந்த ஆண்டில் சென்னையைப் பொறுத்தவரை, 151 கிலோ தங்கம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டில்தான் சென்னையில் அதிக அளவாக 130 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடத்தல் தங்கம்

இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, “சென்னை விமான நிலையத்தைப் பொறுத்தவரை, சோதனை மிகக் கடுமையான அளவில் இருக்கும். தங்கம் மட்டுமின்றி எந்தக் கடத்தல் பொருள் வந்தாலும் அது கண்டுபிடிக்கப்பட்டுவிடும். அதேபோல, கடத்தல்காரர்கள் குறித்தும், கடத்தல் சரக்குகள் வருவது குறித்தும் தொடர்ந்து தகவல்கள் சேகரித்துக்கொண்டுதான் இருக்கிறோம். எந்த வழியிலும் தங்கம் எங்களைத் தாண்டி வெளியே சென்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.

Also Read: திருச்சி: விமான நிலையத்தில் தொடரும் தங்கக் கடத்தல் – கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்குத் தொடர்பா?

AIARA

🔊 Listen to this சமீபத்தில் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து முடிந்தது. இந்தக் கூட்டத்தொடரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், இந்திய விமான நிலையங்களில் பிடிபட்ட கடத்தல் தங்கம் குறித்துக் கேள்வி எழுப்பினார். அதற்கு, எழுத்துபூர்வமான பதிலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார். நிர்மலா சீதாராமன் இந்தியாவைப் பொறுத்தவரை சென்னை, கோழிக்கோடு, கொச்சின், திருச்சி போன்ற விமான நிலையங்களில் அதிக அளவிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மத்திய…

AIARA

🔊 Listen to this சமீபத்தில் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து முடிந்தது. இந்தக் கூட்டத்தொடரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், இந்திய விமான நிலையங்களில் பிடிபட்ட கடத்தல் தங்கம் குறித்துக் கேள்வி எழுப்பினார். அதற்கு, எழுத்துபூர்வமான பதிலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார். நிர்மலா சீதாராமன் இந்தியாவைப் பொறுத்தவரை சென்னை, கோழிக்கோடு, கொச்சின், திருச்சி போன்ற விமான நிலையங்களில் அதிக அளவிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மத்திய…