ட்விட்டரின் புதிய அப்டேட், எரிச்சலான எலான் மஸ்க்!

  • 6

NFT எனப்படும் டிஜிட்டல் கலைப்பொருட்கள் மீது கடந்த சில ஆண்டுகளாகவே இணையதள பயனர்கள் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த NFT ட்ரெண்டிடை முடிந்தளவு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தங்களுடைய பிரத்தியேக NFT-க்களைத் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் ட்விட்டரும் NFT தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றைக் கடந்த வியாழன் அன்று வெளியிட்டது. அந்த அறிவிப்பில், NFT-க்களைத் தங்களுடைய புரொஃபைல் பிக்சராக வைத்துக்கொள்ளும் வசதியைப் பயனர்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்துவதாக அறிவித்திருந்தது ட்விட்டர்.

Ready to show off your NFT? Follow these simple steps to connect your crypto wallet and let’s see your NFT PFPs! pic.twitter.com/epSL7VXG5o

— Twitter Blue (@TwitterBlue) January 20, 2022

“நீங்கள் கேட்டீர்கள், நாங்கள் உருவாக்கியுள்ளோம்” என்ற அறிவிப்புடன் ட்விட்டர் இந்த அப்டேட்டை வெளியிட்டு இருந்தது. வட்ட வடிவ வழக்கமான புரொஃபைல் பிக்சருக்கு மாற்றாக அறுங்கோண வடிவத்தில் இந்த NFT புரொஃபைல் பிக்சர் இருக்குமாம். இந்த அப்டேட் முதற்கட்டமாக ட்விட்டர் ப்ளூவுக்கு சந்தாதாரராக இருக்கும் IOS பயனர்களுக்கு மட்டும் வெளியிட்டிருக்கிறது ட்விட்டர். ஆன்ட்ராய்டு பயனர்களுக்கும் இந்த வசதியை கொடுக்கப்படுமா என்பது குறித்த தகவல்கள் எதையும் ட்விட்டர் இதுவரை பகிர்ந்து கொள்ளவில்லை.

This is annoying pic.twitter.com/KAkDl29CTX

— Elon Musk (@elonmusk) January 21, 2022

ட்விட்டரின் இந்தப் புதிய அப்டேட்டைத் தான் ‘எரிச்சலூட்டும் விதமாக இருப்பதாக’க் கூறி ட்வீட் செய்திருக்கிறார் எலான் மஸ்க். கிரிப்டோ பயனர்கள் தங்களுடைய கிரிப்டோ வாலட்டில் இணைத்துள்ள NFTயை ட்விட்டரில் ப்ரொபைல் பிக்சராக வைத்துக் கொள்ள முடியுமாம். அறுங்கோண வடிவத்தில் இருக்கும் இதனை தொடும் போது, அந்தக் குறிப்பிட்ட NFT யின் உரிமையாளர் யார், அது என்ன விதமான NFT என அந்த NFT குறித்த தகவல்களையும் நம்மால் அறிந்து கொள்ள முடியுமாம். இந்த புதிய அப்டேட்டுக்கு எலான் மஸ்க் எரிச்சலானாலும், NFT பயனர்கள் தம்ஸ் அப் காட்டியிருக்கிறார்கள்.

AIARA

🔊 Listen to this NFT எனப்படும் டிஜிட்டல் கலைப்பொருட்கள் மீது கடந்த சில ஆண்டுகளாகவே இணையதள பயனர்கள் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த NFT ட்ரெண்டிடை முடிந்தளவு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தங்களுடைய பிரத்தியேக NFT-க்களைத் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் ட்விட்டரும் NFT தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றைக் கடந்த வியாழன் அன்று வெளியிட்டது. அந்த அறிவிப்பில், NFT-க்களைத் தங்களுடைய புரொஃபைல் பிக்சராக வைத்துக்கொள்ளும் வசதியைப் பயனர்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்துவதாக அறிவித்திருந்தது…

Leave a Reply

Your email address will not be published.