டிடிவி.தினகரனை கண்டித்து அமமுகவில் இருந்து 30க்கும் மேற்பட்டோர் ராஜினாமா

டிடிவி.தினகரனை கண்டித்து அமமுகவில் இருந்து 30க்கும் மேற்பட்டோர் ராஜினாமா

சென்னை: டிடிவி.தினகரனின் நடவடிக்கைக்கு எதிராக பூந்தமல்லி அமமுக வட்டச்செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் என 30க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இருந்து கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் இடையிலான கருத்து வேறுபாடு முற்றிய நிலையில் உள்ளது. இதனால், டிடிவி.தினகரன் தன்னுடைய கட்சி நிர்வாகிகள் யாரும் சசிகலாவை நேரில் சென்று சந்திக்கக்கூடாது என அறிவுறுத்தி வருகிறார். ஆனால், சில நிர்வாகிகள் சசிகலாவை நேரில் சென்று சந்தித்து வருகின்றனர். இந்தநிலையில், பூந்தமல்லியை சேர்ந்த அமமுக முக்கிய நகர்மன்ற நிர்வாகி ஒருவர் கடந்த வாரம் சசிகலாவை நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளார். இதனால், அதிருப்தி அடைந்த டிடிவி.தினகரன் குறிப்பிட்ட முக்கிய நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கினார்.இதேபோல், பூந்தமல்லியை சேர்ந்த சில நிர்வாகிகளையும் டிடிவி.தினகரன் கட்சியில் இருந்து நீக்கினார். இதற்கு விளக்கம் கேட்டு டிடிவி.தினகரனை சம்பந்தபட்ட நிர்வாகிகள் சந்திக்க முயன்றனர். ஆனால், அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்தநிலையில், டிடிவி.தினகரனின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பூந்தமல்லி 21வது வார்டு வட்ட செயலாளர்கள், நகர செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் என 30க்கும் மேற்பட்டோர் நேற்று அமமுகவில் இருந்து கூண்டோடு ராஜினாமா செய்தனர்.

AIARA

🔊 Listen to this சென்னை: டிடிவி.தினகரனின் நடவடிக்கைக்கு எதிராக பூந்தமல்லி அமமுக வட்டச்செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் என 30க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இருந்து கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் இடையிலான கருத்து வேறுபாடு முற்றிய நிலையில் உள்ளது. இதனால், டிடிவி.தினகரன் தன்னுடைய கட்சி நிர்வாகிகள் யாரும் சசிகலாவை நேரில் சென்று சந்திக்கக்கூடாது என அறிவுறுத்தி வருகிறார். ஆனால், சில நிர்வாகிகள் சசிகலாவை நேரில் சென்று சந்தித்து வருகின்றனர். இந்தநிலையில், பூந்தமல்லியை சேர்ந்த அமமுக…

Leave a Reply

Your email address will not be published.