`ஜெயலலிதா சீரியஸாக இருந்தபோது இ.பி.எஸ் ரியாக்ஷன்..!’ -அப்போலோ மர்மங்களை உடைக்கும் முன்னாள் எம்.பி

சசிகலாவின் அதி தீவிர விசுவாசியாக இருந்தவர் நாகராஜன். கோவை எம்.பியாக இருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகுமே இ.பி.எஸ், ஓ.பி.எஸ் அணிகளுக்கு செல்லாமல் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டிலேயே இருந்தார். விளைவு அ.தி.மு.கவில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்.

நாகராஜன்

Also Read: அதிமுக மாஜிக்களுக்கு அடுத்தடுத்து ஸ்கெட்ச் போடும் திமுக! – பரபரக்கும் கோவை அரசியல்

சசிகலாவின் அரசியலும் நிலை இல்லாததால் நாகராஜன் அரசியலில் இருந்தே விலகி இருந்தார். இதை புரிந்து கொண்ட தி.மு.க நாகராஜனை தங்கள் பக்கம் இழுத்துவிட்டது.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு வழக்கறிஞர் குழுவில் இருந்த நாகராஜன், சசிகலாவின் தீவிர ஆதரவாளர். சசிகலா கணவர் நடராஜன் உயிரிழந்தபோது, அவர் பரோலில் வெளிவர நாடாளுமன்ற உறுப்பினராக கையெழுத்து போட்டது நாகராஜன் தான். சொத்து குவிப்பு வழக்கு, அப்போலா மர்மங்கள், கொடநாடு வழக்கு போன்ற பல விஷயங்கள் நாகராஜனுக்கு தெரியும்.

நாகராஜன் ஸ்டாலின்

அதனால்தான் தி.மு.க அவரை இழுத்துள்ளது என்கிறார்கள். தோட்டத்தில் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தவரை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம். சின்னம்மா புகழ் பாடிக் கொண்டிருந்தவரின், பேச்சில் உதயநிதி புகழ் அதிகம் எட்டிப் பார்க்கிறது.

“அ.தி.மு.க-வில் இருந்து விலகி தி.மு.க-வில் இணைய வேண்டிய அவசியம் என்ன..?

“அ.தி.மு.க அம்மாவோட பாதைல போகவே இல்ல. அழிவு பாதைல போயிட்டு இருக்கு. அ.தி.மு.க இப்ப பல கிளைகளா பிரிஞ்சுருச்சு. ஒவ்வொரு மாவட்டத்துலயும் தனித்தனியா பட்டா போட்டு எடுத்துட்டாங்க. கடந்த நாலு வருஷமா மக்களுக்கு சேவை செய்ய முடியல. தி.மு.க-வுல சேர்ந்ததை மக்களுக்கு சேவை செய்யறதுக்கான வாய்ப்பாக பார்க்கறேன். எதிர்பார்போட எல்லாம் நான் தி.மு.க வரல. அப்படி போகணும்னா எடப்பாடிக் கூடயே போயிருப்பேன்”.

நாகராஜன்

“ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க-வில் நடைபெற்ற மாற்றங்கள் பற்றி சொல்லுங்களேன்..?”

“பல ராஜ ரகசியங்களுக்கு நான் ஒரு சாட்சி. உள் அரங்கத்துல நடந்த பல விஷயங்களை இப்ப பேசறது அரசியல் நாகரிகமா இருக்காது. அப்போலோ மருத்துவமனைலயே மாற்றங்கள் தெரிஞ்சுது. ஒரு அமைச்சர் ஜெயலலிதா அப்போலோ 3 ஸ்வீட் சாப்பிட்டாங்கனு சொல்லிட்டு.. அப்பறம் இல்லைனு சொன்னார். ஆனா, அவங்க ஸ்வீட் சாப்பிட்டது உண்மைதான். சீரியல் எல்லாம் பார்த்துட்டு இருந்தாங்க. திடீர்னு ஒருநாள் கொலாப்ஸ் ஆகிட்டாங்க. அந்த ரூம்லயே ஆபரேஷன் பண்ணாங்க. அப்ப அவங்களுக்கு ரத்தம் தேவைப்பட்டுச்சு. அப்ப நான் அவசர அவசர ஓடிப் போனேன். கீழ ஒரு வராண்டால எடப்பாடி பழனிசாமி, வேலுமணி உக்காந்து பேசிட்டு இருந்தாங்க. நான் பதறி போய் அம்மாக்கு சீரியஸ் ஆகிடுச்சுனு தகவலை சொன்னனேன். அவங்க, ‘எங்களுக்கு ஏற்கெனவே நியூஸ் வந்துடுச்சு’னு ரொம்ப கேஷ்வலா சொன்னாங்க.

அப்போலோ …

அம்மா இறந்தப்ப சாய்ங்காலம் எல்லா அமைச்சரும் எப்படி உக்காந்துட்டு இருந்தாங்கனு க்ளோஸ்அப்ல பாருங்க. நான் ஒரு இடத்துல உக்காந்து இருந்தப்ப, ரெண்டு பெரிய தலைவருங்க என்னைய தள்ளினாங்க. அப்பறம் தான் இன்னொரு அமைச்சர், ‘கேமரா ஆங்கலை மறைக்கறீங்கனு தான் உங்களை தள்ளிவிட்டாங்க’னு சொன்னார். அதுக்கப்பறம் நடந்தது எல்லாத்துக்குமே தெரியுமே”.

“அ.தி.மு.க-வில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து சசிகலா என்ன சொன்னார்?”

“எம்.ஜி.ஆர் மறைவுக்கப்பறம் அ.தி.மு.கவை, ஜெயலலிதாவை உருவாக்க காரணமே சின்னம்மாதான். அவங்க இல்லாட்டி, அ.தி.மு.க எப்பவோ அழிவுப் பாதைக்கு போயிருக்கும். அவங்க கால்ல விழுகாம யாரும் பதவி வாங்கலை. யாரையாவது இல்லனு சொல்ல சொல்லுங்க பார்க்கலாம். பெங்களூர் ஜெயில்ல நான் சசிகலாவை பார்த்தேன். ‘எல்லாரும் சொன்னீங்க. உங்க பேச்சை எல்லாம் கேட்டுதான் இந்த முடிவை எடுத்தோம். நமக்கு துரோகம் பண்ணிட்டாங்க. பரவாயில்லை நம்ம வளர்த்த பிள்ளைங்கதான்’னு பெருந்தன்மையாக ஏத்துக்கிட்டாங்க”.

சசிகலா

“கொடநாடு கொலை கொள்ளை வழக்கை எப்படி பார்க்கிறீர்கள்?”

“எல்லாரும் அம்மா தெய்வம். அவங்க வாழ்ந்த இடம் கோயில்னு சொல்றாங்க. அந்த சம்பவம் நடந்தப்ப நான் காலைல 6 மணிக்கு அங்க போயிட்டேன். எந்தத் தலைவர் அங்க எட்டி பார்த்தாங்க..? மனிதாபிமானம் இருக்கறவங்க, நாலு வீடு தள்ளி நடக்கற கொள்ளைய கூட கேப்பாங்க. எல்லாம் சும்மா நாடகம் நடத்திட்டு இருக்காங்க. ஒரு ஆள் கூட அங்க போகல. கொடநாடு எஸ்டேட்க்கு அஸ்திவாரம் எடுத்ததுல இருந்து எல்லாம நேரத்துலயும் நான் இருந்துருக்கேன். சாதரணமான ஒரு நபர் அங்க போக முடியாது. அதைப்பத்தி எல்லாம் தெரிஞ்சவங்களால தான் உள்ள போக முடியும். அதுக்காகதான் அவங்க கனகராஜை தேர்ந்தெடுத்துருக்கனும். கொடநாடு எஸ்டேட் அமைப்புப் பத்தி கனகராஜ்க்கு எல்லாம் தெரியும்”.

கொடநாடு

“இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தொடங்கி பலரின் பெயர்கள் அடிபடுகிறதே.?”

“கொடநாடு மறுவிசாரணைல நானும் விசாரணைக்கு போயிட்டு வந்துருக்கேன். அதனால, அதைப்பத்தி ஆழமா பேசினா.. அது விசாரணைய பாதிக்கும். ஒரு வழக்கறிஞரா அந்த வழக்குல இருக்கற சில ஓட்டைகளை சொல்ல முடியும். வழக்கு விசாரணை ரொம்ப வேகமாக இருந்துச்சு. வழக்கை வேகமாக விசாரிக்கறதுக்காகவே, நிறைய சாட்சிகளை விடுவிச்சுருக்காங்க. 100 சாட்சிகள் வரைக்கும் இருந்துருக்காங்க. ஆனா, 40 சாட்சிங்க கிட்ட தான் விசாரணை பண்ணிருக்காங்க. 60 சாட்சிகளை விட்டுருக்காங்க. இதனாலதான் மறுவிசாரணை தொடங்கிருக்காங்க. மடியில் கனம் இல்லாட்டி, வழில பயம் தேவையில்ல. தேவையில்லாம பதற்றப்படறது சந்தேகத்தை அதிகமாக்கும்”.

நாகராஜன்

“கடைசி வரை அ.தி.மு.கவில் தான் இருப்பேன்.. அரசியலே வேண்டாம் என்று கூறிவந்தீர்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அங்கு சேர்வது சுயநல அரசியல் இல்லையா..?

நாகராஜன்

“வருங்கால சந்ததிகளை.. தமிழ்நாட்டை யார் காப்பாத்தறது. அது தி.மு.க கைலைதான் இருக்கு. அவங்களால மட்டும்தான் அது முடியும். நான் தி.மு.க வரதக்கு அதுதான் காரணம். உண்மைய சொல்லனும்னா எம்.பியா இருந்தப்ப என்னால சரியா வேலை செய்ய முடியல. ‘கோவை வளர்ச்சிக்கு என்ன தேவையோ சொல்லுங்க பார்த்துக்கலாம்’னு தலைவரும், சின்ன தலைவரும் இப்ப சொல்லிருக்காங்க. கோவை மக்களுக்கு சேவை செய்ய ஒரு நல்ல வாய்ப்பாதான் இதை பார்க்கறேன். நான் ஓப்பனிங் பேட்ஸ்மேன்தான். போக போக பாருங்க. இந்தப் பேட்டி வெளியாகரதுக்குள்ள, நிறைய பேர் தி.மு.க வந்துடுவாங்க.”

🔊 Listen to this சசிகலாவின் அதி தீவிர விசுவாசியாக இருந்தவர் நாகராஜன். கோவை எம்.பியாக இருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகுமே இ.பி.எஸ், ஓ.பி.எஸ் அணிகளுக்கு செல்லாமல் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டிலேயே இருந்தார். விளைவு அ.தி.மு.கவில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். நாகராஜன் Also Read: அதிமுக மாஜிக்களுக்கு அடுத்தடுத்து ஸ்கெட்ச் போடும் திமுக! – பரபரக்கும் கோவை அரசியல் சசிகலாவின் அரசியலும் நிலை இல்லாததால் நாகராஜன் அரசியலில் இருந்தே விலகி இருந்தார். இதை புரிந்து…

🔊 Listen to this சசிகலாவின் அதி தீவிர விசுவாசியாக இருந்தவர் நாகராஜன். கோவை எம்.பியாக இருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகுமே இ.பி.எஸ், ஓ.பி.எஸ் அணிகளுக்கு செல்லாமல் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டிலேயே இருந்தார். விளைவு அ.தி.மு.கவில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். நாகராஜன் Also Read: அதிமுக மாஜிக்களுக்கு அடுத்தடுத்து ஸ்கெட்ச் போடும் திமுக! – பரபரக்கும் கோவை அரசியல் சசிகலாவின் அரசியலும் நிலை இல்லாததால் நாகராஜன் அரசியலில் இருந்தே விலகி இருந்தார். இதை புரிந்து…