`ஜிஎஸ்டி-க்குள் பெட்ரோல், டீசல் விலை… திமுக-வில் இரட்டை கருத்து!’ – அண்ணாமலை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பா.ஜ.க சார்பில் நடைபெறும் சிறுபான்மையினர் இணைப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், “பாரதிய ஜனதா கட்சி அனைத்து மதத்திற்கும் பொதுவானதாகச் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் தி.மு.கவின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது ஒரு மதத்திற்கு மட்டும் எதிராக செயல்படுகிறதோ எனத் தோன்றுகிறது.

அண்ணாமலை

`அறநிலையத்துறையின் செயல்பாடுகளுக்கு அண்ணாமலை தடைக்கல்லாக இருக்கக்கூடாது. படிக்கல்லாக இருக்க வேண்டும்’ என என்னைப் பார்த்து அமைச்சர் சேகர்பாபு சொல்லியிருக்கிறார். ஒரு கண்ணாடி முன்பு தன்னை நிலைநிறுத்தி கொண்டு இதே வாசகத்தை அவரே அவரைப் பார்த்து திரும்பக் கேட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில், பா.ஜ.க., இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமியம் உள்பட அனைத்து மதமும் முக்கியம் என்றே கருதுகிறது. தமிழகத்தில் காங்கிரஸ், தி.மு.கவின் ‘பி’ டீமாக மாறிவிட்டது என்பது எல்லோருக்குமே தெரியும்.

அந்தக் குற்றச்சாட்டில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவ்வப்போது தி.மு.கவை குறைகூறுவது போல் அந்தக்கட்சியின் மாநிலத் தலைவர் அழகிரி அறிக்கைகளை விடுகிறார். பொதுவாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அடித்தளம் இல்லாத கட்சியாக மாறிவிட்டது. தி.மு.க சொல்வதை கிளிப்பிள்ளை போல அப்படியேக் கேட்டு செயல்படுவதே காங்கிரஸிற்கு வாடிக்கையாகிவிட்டது.

அண்ணாமலை

எனவே, தி.மு.க மீது அழகிரி கூறியுள்ள குற்றச்சாட்டை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அனைத்து மாநில பிரதிநிதிகள் கலந்துகொண்டு ஜி.எஸ்.டி. குறித்த முடிவுகளை எடுக்கின்றனர். தற்போது நூல் மீதான ஜி.எஸ்.டி வரியை 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்த கவுன்சில் முடிவு எடுத்த போதிலும் தமிழக பா.ஜ.கவின் வேண்டுகோளின்படி அந்த வரி உயர்வு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

மூலப்பொருட்கள் இடையிலான விலை வித்தியாசங்கள் அடிப்படையிலேயே ஜி.எஸ்.டி வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில்தான் செருப்பு மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது. இது யார்மீதும் பாரபட்சம் காட்டாமல் எடுக்கப்பட்ட முடிவு. பெட்ரோல்-டீசல் விலை குறைப்பை பற்றி தி.மு.கதான் முதலில் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும். ஏனெனில் பெட்ரோல்-டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என ஒரு தி.மு.க எம்.பி ஒரு கருத்தைக் கூறுகிறார்.

அண்ணாமலை

தி.மு.கவின் நிதி அமைச்சர் ஜி.எஸ்,டிக்குள் பெட்ரோல்-டீசலை கொண்டு வர எதிர்ப்பு தெரிவிக்கிறார். அவர்களுக்குள்ளேயே இரட்டை கருத்து உள்ளது. எனவே தமிழ்நாட்டில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க பா.ஜ.க., சொல்வதுபோல் பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டுமா? இல்லையா? என்பதை முதலில் தி.மு.கதான் பேசி முடிவெடுக்க வேண்டும்” என்றார்.

🔊 Listen to this கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பா.ஜ.க சார்பில் நடைபெறும் சிறுபான்மையினர் இணைப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், “பாரதிய ஜனதா கட்சி அனைத்து மதத்திற்கும் பொதுவானதாகச் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் தி.மு.கவின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது ஒரு மதத்திற்கு மட்டும் எதிராக செயல்படுகிறதோ எனத் தோன்றுகிறது. அண்ணாமலை `அறநிலையத்துறையின் செயல்பாடுகளுக்கு அண்ணாமலை தடைக்கல்லாக இருக்கக்கூடாது. படிக்கல்லாக…

🔊 Listen to this கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பா.ஜ.க சார்பில் நடைபெறும் சிறுபான்மையினர் இணைப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், “பாரதிய ஜனதா கட்சி அனைத்து மதத்திற்கும் பொதுவானதாகச் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் தி.மு.கவின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது ஒரு மதத்திற்கு மட்டும் எதிராக செயல்படுகிறதோ எனத் தோன்றுகிறது. அண்ணாமலை `அறநிலையத்துறையின் செயல்பாடுகளுக்கு அண்ணாமலை தடைக்கல்லாக இருக்கக்கூடாது. படிக்கல்லாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *