ஜப்பானில் 8 மாடி கட்டிடத்தில் தீ விபத்து: 20 பேர் பலி?

டோக்கியோ: மேற்கு ஜப்பானின் ஒசகாவின் கிடாசின்சி பகுதியில் 8 மாடி கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் மருத்துவமனை,  பள்ளி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று திடீரென நான்காவது மாடியில் தீப்பற்றியது. மளமளவென பரவிய தீயால், சிகிச்சை பெற வந்தவர்கள் உட்பட ஆங்காங்கே இருந்தவர்கள் என அனைவரும் அலறி கூச்சலிட்டனர். இதனிடையே தகவலின் பேரில் தீயணைப்பு துறை வீரர்கள் அங்கு விரைந்தனர். மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் 27 பேர் மீட்கப்பட்டனர். மேலும் காயமடைந்த நிலையில் பெண் ஒருவர் மீட்கப்பட்டார். ஜன்னல் வழியாக மீட்கப்பட்ட இவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 70 தீயணைப்பு வாகனங்கள் நீண்ட நேரம் போராடி  தீயை அணைத்தன. இந்த தீ விபத்தில் 20 பேர் பலியானதாக கூறப்படுகிறது. ஆனால், எத்தனை பேர் இறந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

🔊 Listen to this டோக்கியோ: மேற்கு ஜப்பானின் ஒசகாவின் கிடாசின்சி பகுதியில் 8 மாடி கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் மருத்துவமனை,  பள்ளி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று திடீரென நான்காவது மாடியில் தீப்பற்றியது. மளமளவென பரவிய தீயால், சிகிச்சை பெற வந்தவர்கள் உட்பட ஆங்காங்கே இருந்தவர்கள் என அனைவரும் அலறி கூச்சலிட்டனர். இதனிடையே தகவலின் பேரில் தீயணைப்பு துறை வீரர்கள் அங்கு விரைந்தனர். மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் 27 பேர்…