`சொத்துக்காக பெற்றோரை பிள்ளைகள் சித்ரவதை செய்கின்றனர்!’ – மும்பை உயர் நீதிமன்றம்

வயதான காலத்தில் முதியவர்கள் மிகவும் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகின்றனர். ஆனால் சிலரின் பிள்ளைகளோ அதற்கு இடம் கொடுக்காமல் சொத்தை பிரித்துக்கொடுக்கும்படி, அல்லது சொத்தை தங்களது பெயரில் எழுதி வைக்கும்படி கூறி அவர்களின் நிம்மதியை பறிக்கும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

மும்பையில் பெண் ஒருவர் சொத்துக்காகத் தன் தந்தையை தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளார். அவரை, அவரது தந்தையின் வீட்டைவிட்டு காலி செய்யும்படி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பையின் தென்பகுதியில் பணக்காரர்கள் வசிக்கும் அல்டமண்ட் ரோட்டில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் சஞ்சீவ் (75). பணக்காரரான சஞ்சீவுக்கு நான்கு மகள்கள். அதில் ஒரு மகள் அவருடன் வசித்து வந்தார்.

Court (Representational Image)

Also Read: பெண் பத்திரிகையாளர் கூட்டு பாலியல் வழக்கு: தூக்குதண்டனையை ஆயுள்தண்டனையாக்கிய மும்பை உயர்நீதிமன்றம்!

சஞ்சீவுடன் வாழ்ந்து வந்த அவரின் மகள், தன் தந்தையிடம், அந்த வீட்டில் தனக்குரிய பங்கைப் பிரித்துக் கொடுக்கும்படி கூறி தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளார். ஆனால் சஞ்சீவ் தன் மகளை வீட்டை விட்டு வெளியில் செல்லும்படி கூறினார். இது தொடர்பாக முதியோர் நலத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதில் முதியவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

இத்தீர்ப்பை எதிர்த்து சஞ்சீவின் மகள் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இம்மனு நீதிபதி கவுதம் பட்டேல் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், “மும்பையில் பல ஆண்டுகளாக பணக்கார தந்தைகள் தங்களது சொந்தப் பிள்ளைகளால் சொத்துக்காக சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதை நாங்கள் பார்க்கிறோம். பெற்றோரின் பெயரில் உள்ள சொத்துக்களை பிடுங்க, பிள்ளைகள் அவர்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்ரவதை கொடுக்கின்றனர். இந்த வழக்கும் அது போன்றதுதான்.

Court -Representational Image

Also Read: ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்த 40 பழங்குடியின குழந்தைகள்; மகாராஷ்டிர அரசை விளாசிய உயர்நீதிமன்றம்!

சம்பந்தப்பட்ட பெண் உடனே தன் தந்தையின் வீட்டில் உள்ள பொருள்களை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறவேண்டும். அந்தத் தந்தையை அமைதியாக வாழவிடுங்கள். சம்பந்தப்பட்ட பெண்ணின் தந்தை உயிரோடு இருக்கும் வரை அப்பெண்ணிற்கு சொத்தில் பங்கு கிடையாது. சம்பந்தப்பட்ட முதியவரிடம் பேசியதில் அவரும் தன் மகள் வீட்டை விட்டு வெளியில் செல்லவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

🔊 Listen to this வயதான காலத்தில் முதியவர்கள் மிகவும் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகின்றனர். ஆனால் சிலரின் பிள்ளைகளோ அதற்கு இடம் கொடுக்காமல் சொத்தை பிரித்துக்கொடுக்கும்படி, அல்லது சொத்தை தங்களது பெயரில் எழுதி வைக்கும்படி கூறி அவர்களின் நிம்மதியை பறிக்கும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மும்பையில் பெண் ஒருவர் சொத்துக்காகத் தன் தந்தையை தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளார். அவரை, அவரது தந்தையின் வீட்டைவிட்டு காலி செய்யும்படி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…