“சுங்கச்சாவடியினை ரத்து செய்ய பரிந்துரைக்க நேரிடும்!” – எச்சரிக்கும் கரூர் ஆட்சியர்

  • 6

கரூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மணவாசி பகுதியில் ஒரு சுங்கச்சாவடியும், திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலன் செட்டியூர் பகுதியில் ஒரு சுங்கச்சாவடியும் அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.

மணவாசி சுங்கசாவடி

ஆனால், அப்பகுதியில் உள்ள சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் அனுப்பி வந்தனர். இந்த நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், சுங்கசாவடிகளில் சரியான பராமரிப்பு இல்லை என்று திட்ட மேலாளருக்கு கடிதம் எழுதி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், “சுங்கசாவடிகள் உள்ள பகுதிகளில் உள்ள சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால், அப்பகுதிகளில் அதிக அளவிலான விபத்துக்கள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து மாவட்ட அளவில் நடைபெறும் சாலை பாதுகாப்புக்குழுவின் பல கூட்டங்களில் குழுவின் தலைவர் என்ற அடிப்படையில், சுங்கச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் சாலை விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் சாலைகளை முறையாக பராமரிக்க வேண்டும், உயர்கோபுர மின் விளக்குகள் அமைத்தல், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை பதாகைகள் வைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தினேன்.

பிரபுசங்கர்

ஆனால், இதுவரை சாலைகளை முறையாக பராமரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், இது குறித்த விளக்கத்தினை 10 நாட்களுக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், 10 நாட்களுக்குள் பதிலளிக்க தவறினால், சட்ட விதிகளுக்குட்பட்டு சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதை நிறுத்தவும், சுங்கச்சாவடியினை ரத்து செய்யவும் ஒன்றிய அரசின் சாலைப்போக்குவரத்து மற்றும் செடுஞ்சாலை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்க நேரிடும்” என்று எச்சரித்துள்ளார்.

🔊 Listen to this கரூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மணவாசி பகுதியில் ஒரு சுங்கச்சாவடியும், திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலன் செட்டியூர் பகுதியில் ஒரு சுங்கச்சாவடியும் அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. மணவாசி சுங்கசாவடி ஆனால், அப்பகுதியில் உள்ள சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் அனுப்பி வந்தனர். இந்த நிலையில், கரூர் மாவட்ட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *